பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 445 அழிய வேண்டும். வேண்டியவர் என்றால் உதவுதல், விரும்பாதவரை ஒழித்துவிடுதல் என்னும் கள்ள மனம் இல்லாத மெய்வேண்டும் என்பதால்தான், கள்ளாமெய் என்றார் வள்ளுவர். கள்ள ஆசாரம் கொண்டது தான் கள்ளமெய். இப்படி H = - கள்ளத்தனமாக ஒழுகுவோரில் பலவகை உண்டு. மங்கையரைத் தேடித்திரிவோர் வேசிக் கள்ளர் மதத்தின் பெயரைச் சொல்லி மாண்புகளைக் கெடுக்கின்ற ஆசாரக் கள்ளர், கைகுவித்து வணக்கம் செய்து கொண்டே, கள்ளத்தனம் செய்கிற கும் பிடு கள்ளர்; அழுதுகொண்டே காரியத்தை முடிக்கின்ற அழு கள்ளர்; நம்பிக்கைத் துரோகம் செய்கிற மாசாலக் கள்ளர். இப்படி உடம்பால் களவு செய்கிற உன்மத்தத் தனம் இல்லாத மெய்யானது துறவியருக்கு மிகமிக அவசியம் என்று கள்ளாமெய் எனும் அதிகாரத்தில், வள்ளுவர் வழிகாட்டி வருகிறார்.