பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 447 புகழ் பெறுவதற்குப், பலப் பல தியாகங்களைச் செய்திட வேண்டும். புனித காரியங்களில் ஈடுபட வேண்டும். இனிதானவற்றில் ஈடுபாடு கொண்டு, பாடுபட வேண்டும். ஆனால், இகழப்படுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு சிறிய தவற்றைச் செய்தாலும், அவர் உலகம் அறிய இகழ்ச்சிக்கு ஆளாகி, ஈன வாழ்வுக்குத் தேராகி, அவமானப்பட்டு அழிகிறார். அதனால்தான், எடுத்த உடனேயே, எள்ளாமை என்றார். எள்ளாதமெய். அதாவது இகழப்படாத உடம்பு. அப்படி ஒரு தேகம் வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்க வேண்டும். அதையே வேண்டுவான், தொழுவான், துதிப்பான் என்றார். என்பான் என்னும் சொல்லை இரண்டாகப் பிரிக்கிறோம். என் என்றால் எனது. பான் என்பது பான்மையிலிருந்து வந்த சொல். தகுதி, குணம், சிறப்பு நல்வினைச் செயல். எனது தகுதி என்ன? என் சிறப்பு என்ன? என் நல்வினைச் செயலும் பயனும் என்ன என்று எண்ணுகிறபோது, எனைத்தோன்றும் என்று ஒரு சொல்லைப் பதிக்கிறார். எவ்வளவுதான் ஒன்றிப் போனாலும், உள்ளம் புதிந்துபோனாலும் உயிரைப் பிழிகிற ஆசை வந்தாலும் என்று பொருள் தருகிற சொல் பிறர் பொருள் மீது பேயாய் பற்று வைத்து, நாயாய் அலைவது. அப்படிப்பட்ட நிலையைக் கள்ளாமெய், தன், நெஞ்சு என்று மூன்று சொற்களில் முத்தாய்ப்பாக விளக்குகிறார். பிறர் பொருளைப் பார்த்து அவாவும் மெய்: நினைப்பில் பறிக்க நினைக்கும் நெஞ்சு. அவற்றை அடக்கி ஆளும் ஆத்மா. இந்த மூன்றையும் காக்க என்கிறார் வள்ளுவர். உடலை மட்டுமோ, மனத்தை மட்டுமோ, ஆத்மாவை மட்டுமோ காப்பது கூடாது. இகழப்படாமல் புகழப்படுவது போல வாழ, இம்மூன்றையும் காக்க வேண்டும் என்று முதல் குறளில் கூறுகிறார்.