448 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
பொருள் விளக்கம்: | பிறன் பொருளை - மற்றவனது உடமையை கள்ளத்தால் - வஞ்சனையால் கள்வேம் எனல் = திருடிக் கொள்வேன் என்று கருதுதல் உள்ளத்தால் - ஆன்மா ஆகிய மனத்தால் உள்ளலும் = நினைத்து ஆராய்வது கூட தீதே = வாழ்வை அழித்து விடும். சொல் விளக்கம்: உள்ளம் = ஊக்கம், முயற்சி, ஆன்மா உள்ளுதல் ஆராய்தல்,
நினைத்தல்; கள்ளம் = கபடம், வஞ்சனை கள்வேம் = அபகரிப்பேன் (என)
முற்கால உரை:
குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம். ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வேமென்று கருதற்க.
தற்கால உரை:
பிறருக்குரிய பொருளை வஞ்சத்தால் பறித்துக் கொள்வோம் என்று எண்ணாதே. ஏனெனில் அதனை மனத்தால் நினைத்தலும் குற்றமேயாகும்.
புதிய உரை:
பிறரது உடமைகளை வஞ்சனையால் திருடிக் கொள்ளலாம்
என்னும் ஆத்ம சிந்தனை கூட, அவரது வாழ்வையே
அழித்துவிடும்.
விளக்கம்:
நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்பது கிராமியப் பழமொழி. மனம் போல் வாழ்வு என்பது, குணக்குன்றாக விளங்குவோரின் அனுபவக் கூற்று.
சிந்திப்பதற்குப் பெயர்தான் மனம் மன் - சிந்தித்தல் அம் அழகாக. அழகாகச் சிந்தித்தல் என்றால், இtராக, நேராக, செம்மையாக, ஒழுக்கமாக என்று அர்த்தம்.
பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/449
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
