பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அதுதருகிற ஐவகை திரவியம் (அரங்கு, இறால், தேன், மயிற்பீலி, காவி) மற்றும் வெற்றி தருகிற விரதமும் வேதனை தீர்க்கும் நோன்பும் குறைந்து போகிறது (இதுகாட்டுவளம்) ൾ வள்ளுவர் 7 வது குறளில் மண்ணுலக மக்கள் பெருக்கக் குறையும் 8 வது குறளில் நீருலக நிறையுற்பத்தி மறையும் என் [D] கூறியுள்ளார். 9 வது குறளில் மக்கள் குடி இருப்புகளும் மாயும், காடுவளமும் காயும் மழை வளம் இல்லாமற் போனால் என்று வான்சிறப்பைத் தேன்தமிழ்ச்சொற்களால் தீர்க்கமாக உரைக்கின்றார். தான மென்பது தக்கார்க்கு உவகையுடன் கொடுத்தலை. இந்தச் சொல்லுக்கு உறைவிடம் கோயில், சக்தி, பதவி உயிர்நிலை என்னும் சிறப்புப் பொருள்களும் உண்டு. தவமென்றால் உண்டி சுருக்கல் முதலாயின என்பது பொதுவான பொருள். காடு, தீ, புண்ணியம், கற்புவகை என்னும் சிறப்புப் பொருள்களும் உண்டு. 20. நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு. பொருள் விளக்கம்: யார்யார்க்கும் = உயிர்வாழ்கின்ற அனைவருக்கும். நீரின்றி = நீரான அமுதமின்றி உலகு = உயர்ந்தோரின் நிலமாக விளங்கும் மக்களிடையே வானின்று = வானத்திலிருந்து ஒழுக்கு நடத்தப்பட்டு தொடர்ந்து ஒழுகுகின்ற நீரல்லாமல் அமையாது = எந்த நிறைவும் எந்தப் படைப்பும் ஏற்படாது. சொல் விளக்கம்: அமை - சம்பவித்தல், சேர்தல், படைத்தல், பொருந்துதல், நிறைத்தல்; ஒழுக்கு - நன்னடை, நடந்து, ஒழுகல். உலகு = உயர்ந்தோர், ஒழுக்கம், நிலம், பூமி, மக்கள். நீர் அமுதம், அப்பு, ஒளி, தண்ணிர். முற்கால உரை: எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையி ன் றி உலகில் அமையாதாகின், அந்நீர் வானையின்றி இடையறாது ஒழுகும் ஒழுக்கும் அமையாது.