பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/450

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 419 ஒழுக்கமாகச் சிந்திக்கும் மனத்தால் என்ன பயன் என்றால், அதுதான் மனித உடலமைப் பின் மாண்புமிகு செயலாக அமைந்திருக்கிறது. ஒழுக்கமாக, சீராக சிந்திக்கும்போது, பூரகம், இரேசகம் என்னும் சுவாசத் தொழிலானது, சுகமாகவும், சுமுகமாகவும் நடைபெறுகிறது. இயல் பான சுவாசத்தால், துரையீரலுக்குள் உயிர்க்க ாற்றின் பரிமாற்றம் சரியாக நடக்க, உயிர்க்காற்றைப் பெற்ற இரத்தமானது - - - . ^ * # -" Fo - ------ # . . . . - - - உடல் முழுவதிலும் உள்ள செல்களுக்கு விரைவாக ஒடி, சத்தான் ரத்தத்தைக் கொடுத்து விட்டு, அங்கே தேங்கியிருக்கும் கழிவுகளை எடுத்துக் கொண்டு திரும்ப, இப்படி உடல் へ * I Fo - - . - - * = -: H - H Ho- - is i செழுமைக்கும் வலிமைக்கும் சரியான வண்ணம் சாதித்துக் 2 لسل காண்டிருக்கிறது. தீய எண்ணமானது மனத்திலே தோன்றிய உடனேயே, மனத்தில் ஒரு திகைப்பு. ஒரு வினாடி ஏற்படுகிற அந்தத் திகைப்பானது, சுவாசத்தின் சீரான தன்மையை நிறுத்திவிட்டுத் தொடங்க, அதனால், உயிர்க் காற்று பரிமாற்றம், வேகமான இரத்த ஒட்டம், கழிவுப் பொருள் அகற்றும் பணி எல்லாமே சீர் கெட்டுப் போகின்றன. இப்படி அடிக்கடி தோன்றுகிற தீய எண்ணத்தால், தேகம் பெறுகிற இன்பத்தை விட, துன்பமே அதிகமாகிறது. உள்ளல் என்றால் ஆராய்தல். அதாவது ஆழ்ந்து சிந்தித்தல். தவறான சிந்தனைகள், தேகத்தின் உள்ளுறுப்புக்களைத் தடுமாறச் செய்து, தத்தளிக்கவிட்டு, தொடர்ந்து செய்கிற தூய்மையான பணிகளைத் தோய்ந்து விழச் செய்கிறது. அதனால்தான் மனம் போல வாழ்வு என்றனர். திதல் என்றால் கருகிப்போதல். அழிந்து போதல். உடலுக்கு அடிப்படை ஆதாரமான செல்கள் அழிந்தால், தேகம் அழியும். அதனால் அவரது வாழ்வே அழியும் என்பதால்தான், தீதே என்று ஏகாரமிட்டு எச்சரிக்கின்றார். முதல் குறளில், உடல் மனம் ஆன்மா மூன்றையும் காத்துக் கொள் என்றவர், இரண்டாம் குறளில், உள்ளத்தை ஊறு விளைவிக்கும் நினைப்பிலிருந்து விலக்கிக்கொள் வாழ்வை காத்துக் கொள் என்று எச்சரிக்கின்றார்.