பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/453

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


of F, 9 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: கன்றுதல் = முதிர்தல், பதனழிதல், காதல் கொலை, கொல்லல், வேட்கை; விளைவு = ஆக்கம், வாழ்வு i கண் - உடம்பு; i = கேடு, அழிவு; யா - சந்தேகம், இல்லை விழுமம் = வருத்தம், துக்கம், துன்பம் முற்கால உரை: பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, அப்பொழுது இனிது போலத் தோன்றி, தான் பயன் கொடுக்கும் பொழுது, தொலையாத இடும்பையைக் கொடுக்கும். தற்கால உரை: திருட்டினிடத்து உண்டாகும் கடுமையான பற்றுதல், பயனை அடையுமிடத்து. என்றும் நீங்காத துன்பத்தைத் தந்து விடும். புதிய உரை: கொலை கொள்ளையில் கொண்டுபோய் விடுகிற களவினால் பெறுகிற வாழ்வும், அதனை அனுபவிக்கும் உடம்பும், சந்தேகம் இல்லாமல் அழிவையும் ஆறாத துன்பத்தையுமே தந்து நிற்கும். விளக்கம்: நான்காவது குறளில், களவின் உண்மையான தன்மையை விளக்கிக் காட்டுகிறார் வள்ளுவர். கன்றிய காதல் என்னும் சொல் மிகவும் பொருள் பொதிந்தது. காதல் என்றால் அன்பு, ஆசை, ஆவல் , என்று சுவையான அர்த்தங்கள் இருந்தாலும், தறித்தல், முறித்தல், கொலை, பொருதல் என்னும் பொருள்களும் உள்ளன. வல்லமையால் சொல்லுக்குள் சொல்லை வைக்கும் வள்ளுவர், காதல் என்றதும், கிறங்கி விடுவார்கள் என்று எண்ணியிருப்பார் போலும், அதனால் கன்றிய காதல் என்றார். பிறரை அழிக்கின்ற ஆற்றலில் முதிர்ந்து போனதுதான் களவு என்று, மிகத் தெளிவாக, களவின் வலிமையை இங்கே குறித்துக் காட்டுகிறார். களவின்கண் காதல் கொண்டவன், என்ன ஆவான் என்பதற்குரிய விளக்கமே இந்தக் குறளாகும். மூன்றாவது ஆக்கம் என்றார். அதாவது வாழ்க்கை என்றார். நான்காவது குறளிலும், வாழ்க்கை என்று குறிக்கவே விளைவு என்றார்.