பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: f அருளினது உயர்ச்சியை அறிந்து, அதன்மேல் அன்புடையாராய் ஒழுகுதல், பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி, அவரது சோர்வு பார்ப்பார் மாட்டு உண்டாகாது. தற்கால உரை: பிறர் பொருளைப் பறித்துக் கொள்ளுதலை விரும்பி, அவர் சோர்வினை எதிர்பார்ப்பவர் இடத்தில், அருளை எண்ணி அன்புடையவராக நடக்கும் தன்மை இல்லை. புதிய உரை: நற்செயல் புரியவும், கருணையுடன் பிறருடன் இணங்கி வாழ்வதும் கூடிய பண்புடைய அந்தணர் கூட, பிறர் பொருளைக் கவரும் பொல்லாங்கை நினைக்கும் போதே, எல்லாவற்றையும் இழந்து அழிந்து போகிறார். விளக்கம்: துறவறம் பூண்ட தூயவர்களுக்கு அன்பும் அருளும் இரண்டு கண்கள் போன்றவை. இவற்றை வளர்க்க, எல்லோரிடையேயும் வாழ்ந்து காட்ட முயற்சிப்பதும், முனைப்புடன் நடப்பதுவும் தான் தவவாழ்க்கை ஆகிறது. அப்படிப்பட்ட ஆற்றல் உடையவரைத்தான் வள்ளுவர் இந்தக் குறளில் பார்ப்பார் என்று பெருமையாக அழைக்கிறார். வெப்பத்தையும் குளிரையும் ஒன்றாய்க் கருதி உயிரின் வாதனையையும் வென்று நிற்பதால் அந்தணர் என்றும், உலகப் பற்றை ஆய்ந்து அறிந்து, அவற்றின் மேலமர்ந்து ஆட்சி செய்யும் ஆற்றலால் ஆய்ந்தோர் என்றும், உயர்ந்த வாழ்வை வாழ்ந்து, உலகோர்க்கு இலக்கணமாகத் திகழ்வதால், உயர்ந்தோர் என்றும், வேள்விகள் இயற்றி, ஞாலத்தின் சீலத்தை வளர்ப்பதால், வேள்வியாளர் என்றும் அழைக்கப்படுபவர்கள் தாம் பார்ப்பார் என்று அழைக்கப்பட்டார்கள். அத்தகைய ஆற்றல் மிக்க வேள்வியாளர்கள் கூட, அகத்தை அடக்க இயலாமல், அழிந்துபோகும் உடல் சுகத்தை விரும்பி, பொருள் கருதுகிற செயலைப் பொச்சாப்பு, என்கிறார் வள்ளுவர். பொச்சாப்பு என்றால் பொல்லாங்கு. பொல்லாங்கு என்றால் ஈனத்தனமான செயல். தன் தகுதியை மறந்து தீங்கு இழைத்தல் இல் என்றால் இல்லை, சாவு.