பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: துறவியர், தூய மனம் கொண்டவர்கள் எவ்வாறு வாழ்ந்தாக வேண்டும் என்னும் வரை முறை ஒன்றை அளவின் கண் என்ற சொல்லில் வள்ளுவர் குறித்துக் காட்டுகின்றார். அளவு என்றால் ஞானம், இன் கண் என்றால் இனிய அதாவது தகை சான்ற தேகம். ஒரு மனிதருக்குத் தேவை நலமான தேகம் , தெளிவான ஞானம், இந்த இரண்டுமே ஒருவரை ஒழுக்கமான வாழ்வை வாழ்கிற வல்லமையை அளிக்கின்றன. அப்படி ஒழுகுவது ஒரு நாள் மட்டும் போதுமா என்றால், 'இல்லை, எப்பொழுதும் என்று பதில் தருகிறார் வள்ளுவர். நின்று என்ற சொல்லுக்கு எப்பொழுதும், நிலையாக என்று அர்த்தம். எப்போதும் ஒழுக முடியவில்லை என்றால் என்ன காரணம்? அவர்களுக்கு மன உறுதி இல்லை. உடல் வலிமை இல்லை. ஆத்ம பலம் இல்லை என்று தானே அர்த்தம். அதைத்தான் ஆற் றார் என்கிறார். அதாவது தோற் றார் என்கிறார். ஒழுக்க நெறியில் வாழ இயலாமல் தோற்றவர்கள் மனம் அளவு கடந்த களவில் தானே போய் நிற்கும்? அந்தக் களவுணர்வும் பேராசையில் கன்றிப்போகிறது. பெருமையில் குன்றிப் போகிறது. பிறர் பொருளைக் கவரமுயல்கிறபோது, தறித்தலும், முறித்தலும், காமவிச்சையில் துடித்தலும், கொலை கொல்லுகையில் ஈடுபடுதலும், பொருதலும்தான் நடக்கும். இந்தப் பொருட்களையெல்லாம், காதல் என்னும் ஒரு சொல்லில் வள்ளுவர் வைத்திருக்கிறார். அவ என்றால் அறிவு செய்தல் என்றும் அர்த்தம். அவர் என்றால் அறிவுடையவர், செய்கிறவர் என்று வருவதால், களவின் கண் கன்றிய காதலால், எல்லா இழி செயல்களையும் செய்கிறவர் ஆகிறார். ஆகவே தான் எல்லை கடக்காது வாழ்கிற வாழ்க்கை இனிய வாழ்க்கை. மற்றதெல்லாம் தொல்லைகள் நிறைந்த துயர வாழ்க்கை என ஆறாவது குறளில் அறிவுறுத்துகிறார்.