பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/460

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


華 திருக்குறள் புதிய உரை 459 முற்கால உரை: அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து. அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும். களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனையே நிலைபெறும். தற்கால உரை: தத்தம் வரம் பறிந்து வாழவேண்டும் என்னும் உறுதியுடையவர் நெஞ்சில், அறம் நிலைபெற நிற்பதுபோல், களவுத் தொழிலைக் கருதியவர் நெஞ்சில் வஞ்சம் நிற்கும். புதிய உரை: ஞானத்தை அறிந்தவரது நெஞ்சில் நல்வினையாகிய ஒழுக்கம் நின்று காப்பதுபோல, களவினில் தேர்ந்தவரது நெஞ்சில், வஞ்சகம் (மிக்க முதலைபோல்) வாழ்ந்து, வாழ்வளிக்கும். விளக்கம்: ஞானம் அறிந்தவர், அறிய வல்லவர் நெஞ்சத்தில் எப்போதும் ஒழுக்கம் மேலோங்கிநிற்கும். நல் வினைகள் தவமியற்றுவது போல வாழும். ஆகவே, அவர்கள் நெஞ்சத்தில் அமைதியும், ஆனந்தமும், நிம்மதியும் நீடித்து நிற்கும். அதனால்தான் அந்த அற்புதநிலையை அறம் போல நிற்கும் என்றார். ஆனால், அளவு இல்லாத களவு மனம் கொண்டவரைத், தேர்ந்தார் என்பதில் தவறில்லை. தேவையில்லாத கோரைகள், புல் பூண்டுகள், களைகள் விதைபோடாமலேயே விரைவாக வளர்வது போலத் தீய நினைவுகள் தோன்றிவிட்டால், அது அக்கினிக் குஞ்சாக ஆரம்ப நிலையில் இருந்து, ஆவேசம் கொண்ட அக்கினிப் புயலாக மாறுவது போல, வேகம் பெற்றுவிடும். களவு கொண்டவர் நெஞ்சமானது, சுழல் நீர் பரப்புபோல. அந்த நெடுநீர் நெஞ்சத்தில், வாழ்வது முதலை போன்ற முரண்டு பிடித்த எண்ணங்கள். அந்தக் காரணத்தினால்தான். முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. என்னும் பழமொழியையும் நம் முன்னோர்கள் படைத்துச் சென்றிருக்கின்றனர். நீருக்குள் இருக்கும்போது, யானையையும் பிடித்திழுக்கும் வல்லமை உள்ளது முதலை. அதுபோல, வஞ்சக நெஞ்சுக்குள்ளே வாழ்கிற களவென்னும் முதலை, அழியாது வாழும். அதாவது 100 ஆண்டு காலம் வாழ்கிற முதலையைப்போல, களவு என்னும் முதலையும், கொண்டவரது நெஞ்சுக்குள்ளே, அவர் வாழ்கிற