பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46() டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வரை, வீழ்கிறவரை வாழும். அதனால் தான் கரவு என்னும் ஒரு அருமையான சொல்லை இங்கே தந்திருக்கிறார். முதலை கொண்டதை விடாதது போலவே, முரடனும் தான் கொண்டதை விடாமல், கண்டதிலும் காமமுற்று, காதலுற்று. கடைசியில் தன் அழிவைத்தானே தேடிக் கொள்கிறார். நெருப்பின் இருக்கையாக உடல் இருந்தால், அதற்கேது சக்தி தீய நெருப்பின் இருக்கையாக நெஞ்சம் இருந்தால் ஏது தூய சக்தி? எல்லாம் அந்தக் கரவிலே மறைந்து போகும் என்று எட்டாவது குறளில், களவு நெஞ்சத்தின் கடுமையைக் கூறி, வெளிவந்து விட வேண்டுமென்ற தன் வேட்கையை விவரித்திருக்கிறார். 289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் பொருள் விளக்கம்: களவல்ல = பிறர் பொருளைக் கவர்வது தவிர மற்றைய = வேறெதுவும் நினைவில் கொள்ளாத தேற்றா தவர் = மரம் போன்ற மூடர்கள் அளவல்ல = ஞான மற்ற செயல்களை செய்து ஆங்கே - செய்கின்ற அந்த இடத்திலேயே வீவர் = கேடுற்று அழிவர். சொல் விளக்கம்: வீவர் = கேடு, சாவு; தவர் - தமர், மூடர் தேற்றா - ஒருமரம் முற்கால உரை: களவல்லாத பிறவற்றை அறியாதவர், அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர். தற்கால உரை: களவு எனும் ஒன்றையன்றி, மற்றை நற் செயல் எதனையும் அறியாதவர், வரம்பில்லாத செயலைச் செய்து அப்போதே கெடுவர். புதிய உரை: பிறர் பொருளைக் கவர்வது தவிர, வேறெந்த நினைவும் இல்லாத, மாம் போன்ற முடர், அறிவில்லாமல் தீயன செய்கிற அந்த இடத்திலேயே கேடுற்று அழிவர்.