பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை _ - - சொல் விளக்கம்: If).9 உள்ளத்தால் ஆத்மாவின், ஊக்கம்: பொய்யாது - தவறாது ஒழுகின் முறைப்படி நடத்தல்; உளன் நிறைந்திருத்தல் முற்கால உரை: ஒருவன் தன் உள்ளத்திற்கேற்ப, பொய் கூறாது ஒழுகு வானாயின், அவன் உயர்ந்தோர் உள்ளத்துள் எல்லாம் உளனாம். தற்கால உரை: ஒருவன் தன் உள்ளம் அறிய, பொய் பேசாமல் நடப்பானே யானால், அப்படிப் பட்டவன், உலகத்தார் எல்லாருடைய உள்ளங் களிலும் இடம் பெற்று இருப்பான். புதிய உரை: ஆத்மாவின் ஊக்கத்தால், மெய்மை தவறாது, முறைப்படி நடப்பவன், உயர்ந்த மக்களின் உள்ளங்களில் எல்லாம், நீக்கமற நிறைந்து வாழ்கிறான். விளக்கம்: பொதுமக்களின் வாய்ப் பேச்சுக்கும், வாய் வீச்சுக்கும், ஆளாவதும், ஆட்கொள்வதும் மிக எளிது. ஆனால் அவர்கள் வாயாறப் புகழும் வகையில் வாழ்வதும், அவர்கள் மனதிலே புகுவதும், ஆசைமிகுதியால் புகழ்வதும் போன்றவற்றை பெறுவது அவ்வளவு எளிது அல்ல. அப்படிப்பட்ட புகழ்பெற ஒருவன், தவறாது நடக்க வேண்டும் என்பதை, ஒழுகுதல் என்ற உயர்ந்த சொல்லை இங்கே பெய்து இருக்கிறார். நீர், நிற்காமல் தொடர்ந்து கொண்டே செல்வதைத்தான் ஒழுகுதல் என்பார்கள். அதுபோலவே வாய்மையிலும், மெய்மை o : . == * * 2 - - H ■ : . யிலும், வழிமுறை மாறாது, நேர்மைப்பட ஒழுகிக் கொண்டு, இருக்கும் வாழ்க்கைதான், புற வாழ்க்கையில் போற்றப்படும். அக வாழ்க்கையில் ஆனந்த தீபமாக ஏற்றப்படும் அப்படிப்பட்ட வாய்மை யாளன் அகிலத்தார் மனங்களிலே எப்படி வாழ்கிறான் என்றால், அவன் மக்கள் மனதில் ஏற்படுத்திய மகிமையால் தான் என்பதைத் நான்காவது குறளிலே நளினமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை பொருள் விளக்கம்: மனத்தொடு ஆத்மா உருவாக்குகிற வாய்மை உண்மை பேசும் வலிமையை