பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/472

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை of 7 296. பொய்யாமை அன்ன புகழில்லை, எய்யாமை எல்லா அறமும் தரும் பொருள் விளக்கம்: பொய்யாமை = வாய்மை தவறாததற்கு அன்ன இணையான புகழில்லை - அறிய செயல் எதுவுமில்லை எய்யாமை - ஆனால், பொய்பற்றி அறியாமலே இருந்தால் எல்லா அறமும் - சகலவிதமான ஒழுக்கங்களையும் தரும் - தந்து வாழ்விக்கும் சொல் விளக்கம்: பொய்யாமை = வாய்மை தவறாமை; அன்ன இணையான, ஒத்த புகழ் = அரும் செயல்; எய்யாமை = அறியாமை, அறம் = ஒழுக்கம் முற்கால உரை: ஒருவனுக்கு இம்மைக்கு பொய் யாமையை ஒத்த புகழ் காரணமில்லை. மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும் தானே கொடுக்கும். தற்கால உரை: ஒருவனுக்குப் பொய் சொல்லாமையைப் போன்ற புகழ் வேறு ஒன்றும் இல்லை. அந்த நிலையே அவனுக்கு எல்லாவிதமான அறங்களையும் நீங்காமல் கொண்டு வந்து சேர்க்கும். புதிய உரை: வாய்மை தவறாததற்கு இணையான அரிய செயல் எதுவு மில்லை. ஆனால், பொய் பற்றி அறியாமலே ஒருவன் இருந்தால், அவனை அது சகலவிதமான ஒழுக்கங்களையும் தந்து வாழ்விக்கும். விளக்கம்: என்றுமே அழியாத, ஆனால் ஏற்பதற்கு அழகான ஒரு கருத்தை வள்ளுவர் ஆறாவது குறளில் மிக துணுக்கமாகத் தந்துள்ளார். வாய்மை பேசுவது வலிமை. பொய் பேசாமல் இருப்பது பெருமை என்றெல்லாம் பேசிய வள்ளுவர். புகுத்தியிருக்கும் புதுக் கருத்துதான் பாரிலே எந்த அறிஞனும் சொல்லாத கருத்து.

தேர்ந்து கொண்டு உண்மை பேசுவதும் தெரிந்து கொண்டு H is. # * H = r *** - - * --, - - பொய் பேசாமல் இருப்பதும் சாமர்த்தியந்தான். சக்தி படைத் , செயல் கான். ஆனால், பொய் பற்றியே அறியாதவனாக தெரியாதவனாக, நெஞ்சுக்குள்ளே இடக்காதவனாக வாய்பைகான்