பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 望 s子。 - - == _ புதிய உரை: ஒருவனது வீரத்தின் மெய் நிலையும், விளையும் தன்பையும் அவனது குணம் போலவே அமையும். அதுபோலவே ஒருவனது ஆத்மாவின், மெய் நிலையும், மேன்பை நிலையும், அவன் பேசும் மெய் மொழிகளால் அமையும். விளக்கம்: புற உடம் பின் அழுக்கானது நீராலும், அக உடம் பின் இழுக்கானது வாய்மையாலும் தூய்மைபெறும் என்றே எல்லா உரை ஆசிரியர்களும் பொருள் கண்டிருக்கின்றனர். இங்கே வாய்மையையே பேசுகிற ஒருவனின் வாழ்க்கை விவேகம் நிறைந்தது மட்டுமல்ல; வீரம் மிகுந்ததும் கூட அப்படிப் பட்ட ஒரு வீரனால் நன்மையும், சுகமும் ஏற்படுகிறது என்றால் அது அவனது குணம் போலவே தானே அமையும். ஆன்மாவுக்கு மேன்மை சேர்ப்பது மெய்மையும், பொய்யாமையும். இந்த அக வீரத்தினால் அடுத்தவர்க்கு அமைகிற நன்மை எல்லாம், அவர் பேசுகிற மொழியால்தானே அமையும். ஆக வே புற வ ாழ்வுக்கு என்று ஒரு வீரமு ம், அகி lெ ாழ் விற்கு என்று ஒரு வீரமும் உண்டு என்பதைத் தான் வள்ளுவர் இங்கே குறிப்பிடுகிறார். புற வீரம் செயலால் அமைகிறது. அகவீரம் சொல்லால் அமைகிறது. எனவே வாய் மைக்குரிய வீரத்தை இருவிழிகளாகவே சொல்லும், செயலும் இருப்பதை இந்த எட்டாவது குறளில் திட்ட வட்டமாகத் தெளிவாக்குகிறார். 299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு பொருள் விளக்கம்: எல்லா விளக்கும் = ஒருவர் வாழும் வாழ் நாட்கள் எல்லாம் விளக்கல்ல - புதுமையும், பெருமையும் நிறைந்த நல்ல நாட்களாக அமைவதில்லை. சான்றோர்க்கு உண்மையை ஒம்பிச் சான்றாக வாழ்பவர்களுக்கு பொய்யா விளக்கே - பொய்யில்லாத உண்மைபேசும் நாளே விளக்கு நல்ல நாளாகும் சொல் விளக்கம்: விளக்கு நாள், ஒளி, நாள் புதுமை, இளமை சான்றோர் சான்றாகத்திகழ்பவர்