பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/479

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - 301. செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால்என் பொருள் விளக்கம்: செல்லிடத்து வள மெய்யும், வலிமையும் உள்ள ஒருவன். சினம் காப்பான் தனக்கு ஏற்பட்ட கோபத்தை பிறர்மேல் காட்டாமல் அடக்கும்போது. காப்பான் உண்மையான காவல் வீரன் ஆகிறான் அல்லிடத்து - வறிய மெய்யும், வீரமும் இல்லாதவன் காக்கின் அடுத்தவர்மேல் வரும் கோபத்தை அடக்கிக் கொண்டால். காவாக்கால் என் கோபப்படவில்லை என்று சொல்லுவது ஒழுங்கற்ற செயலாகும். (கேவலமான விளக்கமாகும்) சொல் விளக்கம்: செல்லிடம் வளமையான காலம்; காப்பான் - காவல் விான் அல்லிடம் = வறுமெய்யால் வலிமையற்றவன் வாக்கு ஒழுங்கின்மை முற்கால உரை: தன்சினம் பலிக்கும் இடத்தில் அதனை எழாமல் தடுப்பானே, அருளால் தடுப்பவன் ஆவான். ஏனைப் பலியாவிடத்து அதனைத் தடுத்தால் என். தடாது ஒழிந்தால் என். தற்கால உரை: சினம் செல்லும் இடத்தில் அது வெளிப்படாமல் தடுத்து நிறுத்திக் கொள்பவனே, சினம் வராமல் தடுத்துக் கொள்பவன் ஆவான். சினம் செல்லாத இடத்து அதனைத் தடுத்து நிறுத்தினால் தான் என்ன? தடுத்து நிறுத்தாமல் விட்டால்தான் என்ன? புதிய உரை: வளமையை உடைய வலியவன், தன் சினத்தை வெளிப்படுத் தாது அடக்கிக் காக்கிற பொழுது, அவன் சிறந்த காவல் விான் ஆகிறான். வலிமையின்றி இளைத்தவன் பிறர் மேல் கோபத்தைக் காட்டவில்லை என்று பேசினால் அது கேவலமான விளக்கமாகும். விளக்கம்: தமி ழர்க்கு வீரமும், விவேகமும் இரண்டு கண்கள். தமிழினத்துக்குப் புகழ் மேல் பொல்லாத ஆசை. அதனால், புகழெனின் உயிரும் கொடுப்பார் என்று பாடிப் பாவசப் பட்டார்கள். புலவர்கள் கூடிய சபையில் பெயர் வாங்குவதைவிடப் போர்க்களத்தில் மரணம் அடைவதையே பெருமையா . கருதினார்கள்.