பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 1881 _


_

தற்கால உரை: = r - # - తా * o o i. o == . . " == o i. ஒருவன் யாரொருவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அந்தச் சினத்தை அறவே மறந்துவிட வேண்டும். இல்லை என்றால், அந்தச் சினத்தினால், தீமையான விளைவுகள் தாம் ஏற்படும். புதிய உரை: எவரிடத்தும் பொல்லாங்கு மிக்க பெருங்கோபத்தை விட்டுவிட வேண்டும். இல்லை என்றால், அவர் உடம்பில் உண்டான கோபமானது, மரண வேதனைகளை மிகுதியாக்கிக் கொண்டுவரும். விளக்கம்: முதல் குறள் 301-ல் வலிமையைக் காட்டக் கூடிய இடத்தில் கூட ஒழுக்கத்தைக் காக்க வேண்டும் என்கிறார். வெகுளியால் மற்றவருடன் மோதும் போது தீய விளைவுகள் வருவதுடன் சில சமயங்களில் மரணம் கூட நிகழும் என்கிறார். இந்த மூன்றாவது குறளில், வெகுளியால் இறப்பு நிகழும் என்பதைவிட உடம்பு பாதிக்கப்படுவதால் மரண வேதனைகளே மிகுதியாக வரும் என்கிறார். மனவெறுப்பானது ஒழுங்கான சுவாசத்தை மாற்றி, பாதிக்கிறது. செல்களில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தேங்கி விடுகின்றன. உறுப்புக்கள் செயலற்றுப் போய் விடுகின்றன. அதனாலே உடம்பு உஷணமாகி, எரிச்சல் ஏற்பட்டு விடுகிறது. அதனால் நச்சுப் போன்ற ரணங்கள் உடம்பில் ஆங்காங்கே உண்டாக, அவரது வாழ்வே நோய்க் களமாகி விடுகிறது. ஆகவே பலம் இல் லாரிடத்தும், அல்லது பலம் உள்ளாரிடத்தும், இல்லையில்லை. எல்லோரிடத்தும், உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். கொடுங்கரம் நீட்ட வேண்டாம். பழிபாவத்தில் மாட்ட வேண்டாம் என்று பண்பான ஒரு அறிவுரையை, இந்தக் குறளிலே எடுத்துச் சொல்கிறார். 304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற பொருள் விளக்கம்: உளவு - உட்காரியமான, இரகசியம் பிற மற்ற == - சினத்தின் தனியாப் பெருங்கோபத்தி னால் பகை உட்பகையாக மாறி விடுகிறது