பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 18.) புதிய உரை: சினம் என்பது தான் சேர்ந்திருப்பவனை எரித்து அழிப்பதோடு, அவனுடன் சேர்ந்திராத, ஆனால் சேர்ந்து இருந்து உதவுகின்ற உற்றார். உறவினர்களை எல்லாம் ஒரு சேர அழித்துத் தொலைத்துவிடும். விளக்கம்: உலகத்து நெருப்புக்கு, தான் இருக்கும் இடத்தை அழிக்கவும், தன்னை வந்து சேரும்போது, சேர்ந்த பொருளை அழிக்கவுந்தான் முடியும். ஆனால் மனிதனுக்கு வருகிற கோபம் இருக்கிறதே, அவன் உடல், மனம், ஆன்மா என்று அவனை முழுமையாக அழிப்பதுடன், அவனைச் சார்ந்தும், சேர்ந்தும். உதவியும், தொடர்ந்தும் வருகிற உற்றார் உறவினர்; அவன் அருகில் இல்லாமல், அயல் இடத்தில் இருந்தாலும் அவர்களையும் சேர்த்து அழிக்கின்ற சக்தி படைத்ததாக இருக்கிறது என்பதைத்தான் வள்ளுவர். இந்தக் குறளில், உலகமகா கொடுமையிலும் கொடுமை என்று கூறியிருக்கிறார். அதனால்தான் சித்தர்கள் எல்லோரும், வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை என்றுபாடுகிறார்கள். நெருப்பில் எவ்வளவு விறகுகள் போட்டாலும் எரியும். விறகில் லா விட்டால் அது அணைந்துபோகும். உடம்பிலே உண்டாகின்ற சினம் என்னும் நெருப்புக்கு, விறகு வேண்டாம் எரிய சிறகு வேண்டாம் பறக்க உறவு வேண்டாம் அழிக்க. அது உடலை எரித்து விட்டுத்தான்.அகலும் என்பதால்தான், சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி என்கிறார். 307. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று பொருள் விளக்கம்: சினத்தை - கோபத்தை பொருளென்று உடலாகவே கொண்டவன் - ஆக்கிக் கொண்டவன் கிலத்து பூமியில் உள்ளவர்களுடன் அறைந்தான் - மோதலில் ஈடுபட்ட அவனது கை ஒழுக்க வாழ்வானது பிழையாது தப்பிக்காது அற்று அழிந்து போகிற, தீமைகளை உண்டாக்கும்.