பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/490

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 489 புதிய உரை: நச்செண்ணம் கொண்ட பகைவனைப் போல, உள்ளே இருக்கும் கோபத்தால், அவன் மனதிலுள்ள கொடிய நினைவுகள் எல்லாம், யோசித்துப் பார்ப்பதற்குள் வெளியாகி, கொடிய விளைவுகளை உண்டாக்கி விடுகின்றன. விளக்கம்: வள்ளுவர் கோபத்தை உடலுக்குள்ளே ஒளிந்து நடமாடுகிற அந்தரங்கமான பகைவன் என்கிறார். விஷத்தன்மை கொண்ட பகைவனுக்கு எதிரியை வெட்டி அழிப்பதும், வேறோடு சாய்ப்பதும், மீண்டும் முளை விடாமல் முடிப்பதும் தான் இலட்சியமாக இருக்கும். ஆகவே, உடலுக்குள்ளே ஓங்காரமிட்டுக் கொண்டு இருக்கிற கோபத்தை வள்ளுவர், அந்தரங்கமான அரக்கன் என்கிறார். உடல் முழுவதும் பரவி, உள்ளத்திலே கோபம் கொழுந்து விட்டு எரிவதால், அங்கே உணர்வுகள் மங்கிப் போகின்றன. சிந்தனைகள் முடங்கிப் போகின்றன. செயல் திறன்கள் பயங்கரம் என்கிற போர்வையைப் போர்த்திக் கொள்கின்றன. அதனால் கோப்பட்டவன் யோசிப்பதற்குள், அவன் அந்தரங்கத்தில் எதிர்பார்த்து, ஆனால் வெளியில் நடைபெற வேண்டாம் என்று விரும்பாத, கொடுமைகள், கோரங்கள், கொடுரங்கள், எல்லாமே நடந்து முடிந்து விடுகின்றன. எனவேதான் கோபம் பொல்லாதது. அடக்கினாலும் நில்லாதது. கோபக்காரனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது. ஆகவே கோபத்தை மனதிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று மந்திரா லோசனையாக ஒன்பதாவது குறளில் கூறுகிறார். 310. இறந்தார் இறந்தார் அனையார் சினத்தை துறந்தார் துறந்தார் துணை பொருள் விளக்கம்: இறந்தார் = கோபத்தால் நெறிகடந்து போனவர் இறந்தார் - உணர்வற்ற சவத்துக்கு அனையர் = ஒப்பானவர், (அப்படிப்பட்ட சினத்தை) துறந்தார் = வெறுத்துக் கைவிட்டவர்கள் துறந்தார் = ஏற்கனவே கைவிட்ட நல்லவர்களுக்கு துணை உதவி புரிபவராக ஆகி விடுகிறார் சொல் விளக்கம்: இறந்தார் = நெறிகடந்து சென்றார் இறந்தார் - உணர்வற்ற சவம், துறந்தார் வெறுத்துக் கைவிடுதல் துறந்தார் சினத்தைக் கை விட்டவர்