பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 195 முற்கால உரை: தான் முன்போர் இன்னாமை செய்யாது இருக்க, தன்மேல் செற் றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின் அச்செயல் அவனுக்கு கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். தற்கால உரை: ஒருவன் தான் ஒரு குற்றமும் செய்யாது இருக்கும் நிலையில், தனக்குத் துன்பம் இழைத்தவர்களுக்கு, தான் எதிர்க் கெடுதி செய்வானேயானால், அந்தச் செயலானது, அவனுக்குத் தப்பிப் பிழைக்க முடியாத துன்பத்தைத் தரும். புதிய உரை: தீய மனம் கொண்டு. கொலை வெறியை மேற்கொள்ளும் பகைவர்களுக்கும் துன்பம் இழைக்காத ஒருவனுக்கு, எதிர்காலம் எல்லாம், வாழ்வித்து ஈடேற்றுகின்ற சிறப்பெல்லாம் வந்து சேரும். விளக்கம்: பாதகம் செய்வது பகைவனின் நோக்கம், அதிலும் கொலை வெறி கொண்டு அலைவது, கீழ்மைகளின் பிறவிக் குணம். அவர்களை நேரில் கண்டாலும் பயங்கரம். கனவில் கொண்டாலும் பயங்கரம். அப்படிப்பட்ட ஆலகால விஷம்போன்ற பகைவர்களை, அருள் விழியோடு பார்ப்பதும், அருள்பாலிப்பதும் கஷ்ட மானகாரியந்தான், அவர்களை நினைவால் மறக்க முடியாமலும், மனதால் மன்னிக்க முடியாமலும் இருப்பதுதான், மனித இயல்பாகும். அதையும் மீறி ஒரு அரிய செயலாக, பகைவருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாமல் பொறுத்துக் கொள்வது, பேராண்மையிலும், பேராண்மை ஆகும். அத்தகைய அரிய குணம் கொண்டவர்கள் வாழ்வை, எதிர்காலமே பொறுப்பேற்றுக் கொண்டு, எல்லாச் சிறப்புக்களையும், மேன்மைகளையும் கொடுக்கும் என்கிறார் வள்ளுவர். எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுக்கமுடியும். நல்வினை விதைத்த நல்லோர்கள் எதிர்காலம் நன்மையையே நல்கும் என்ற உண்மையை நிலை நாட்டிக் கூறுகிறார் வள்ளுவர் இந்த மூன்றாவது குறளில்.