பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/499

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: தன் ஆத்ம வேதனையைப் போலவே தன் பகைவர்க்கும் வேதனை உண்டு எனும் உணர்வை பங்கிட்டுப் போற்றாமல், முடிவு எடுக்கும் அறிவான ஆத்மாவினால் என்ன பயன்? ஆவது ஒன்றும் இல்லை. விளக்கம்: ஒரு ஆத்மாவிற்கு வேதனையானது நடத்தல், இருத்தல், கிடத்தல், நிற்றல், உண்டல், மயங்கல், வருந்தல் முதலியவற்றால் விளையும். அதுபோன்ற வேதனைகள் நல்லார்க்கும் உண்டு. போற்றாராகிய (பகைவர்) பொல்லார்க்கும் உண்டு. பொல்லாரின் வேதனையை தாம் அனுபவிக்கின்ற வேதனைபோல் தான் இருக்கும் என்று எண்ணிப் பார்ப்பது சாதாரண மனிதர்களுக்கு உரிய சகஜ குணமாகும். ஆனால் வள்ளுவரோ, அதற்கும் ஒருபடி மேலே சென்று, தனது பகைவர் வேதனைகளைத் தமது வேதனையாக எண்ணி, உணர்வால் பங் கிட்டுக் கொள்கின்ற பண்பு இருக்கிறதே. அதைத்தான் போற்றுகின்ற முடிவு என்கிறார். அப்படிப் போற்றாத முடிவு மாசற்றார்க்கு மாசினையே நல்கும். எனவே உணர்வால் பகைவரை அணுக வேண்டும். அவர் வேதனைக்கு மருந்தாக மாற வேணடும் என்று ஒரு மணியான யோசனையைச் சொல்லிச் செல்கிறார். 316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் பொருள் விளக்கம்: இன்னா என = கேடுபயக்கும் என தான் = தனது ஆன்மா உணர்ந்தவை - எல்லாவற்றிலும் அறிந்து கொண்டதை பிறன்கண் = தனது பகைவன் உடலையும் பாதிக்கும் செயல் - துன்பம் செய்வதில் துன்னாமை வேண்டும் - பொருந்தாத மனம் வேண்டும் சொல் விளக்கம்: ஆன் - ஆத்மா, துன்னாமை = பொருந்தாமை; பிறன் பகைவன் கண் - உடம்பு செயல் - காவல், ஒழுக்கம்