பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/504

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை DO6 _ - புதிய உரை: தான் வெறுக்கின்ற மாற்றார்களுக்குத் தீமைகளை முதலில் செய்தால், அந்தத் தீமைகளின் தாக்கம், அவர் வாழ்கிற ஊழிக்க ாலம் -o i. I r. , -: /T -- ---- == 2 . ". . [.. = o - - வரை, தண்டோராப் போட்டுக் கொண்டு, தீப்பிழம்பாய் வந்து, விளக்கம்: பகல் என்றால் காலையில் இருந்து மாலைவரை உள்ள பொழு இது என்று பொருள் கண்டு இ ருக்கிறார்கள். அதனால்தான் ஒருவன் காலையில் துன்பம் செய்தால், மாலையில் தனக்கு துன்பம் வரும் என்று உரைகண்டு இருக்கிறார்கள். நான் இங்கே பகல் என்பதற்கு, நெடுங்காலம் என்றும், ஊழிக்காலம் என்றும் பொருள் அறிந்து சொல்லியிருக்கிறேன். 'முன் என்றால் முதலில் என்றும் பின் என்றால் எதிர்காலம் என்றும் புதிய பொருளைத் தந்து இருக்கிறேன். ஒருவன் பிறருக்குத் தீமைகளை தான் முதலில் தொடங்கி வைக்கிற செயல் ஆனது, தொடர்ந்து விளைவுகளை ஏற்படுத்துகிற வினையாக மாறுகிறது. அந்த மாறிய தீவினையே ஊழ் வினையாக வந்து, அவன் வாழ் நாள் முழுவதும், உறுத்தி, வருத்தி, தமுக்கடித்து ஊருக்கெல்லாம் உரைத்து, தீப்பிழம்பாக எரித்துத் தொலைக்கிறது. தீங்கிழைத்தவன் மரண பரியந்தம் அந்த தீங்கிழைத்த பயனை அனுபவிப்பான் என்றும், சாதாரண தீச்செயல் எவ்வாறு சக்கராயுதமாகச் சுழன்று, தீப் பிழம்பாக வந்து எரித்துச் சுடுகிறது என்கிற உண்மையை வள்ளுவர் ஒன்பதாவது குறளில் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். 320. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர் பொருள் விளக்கம்: நோய் எல்லாம் - துன்பங்களுக்கு எல்லாம் நோய்செய்தார் = வேதனைதந்து விரட்டுகிற மேலவாம் - பெருந்தன்மைமிக்க அறன் நோயின்மை - தனக்குத் துன்பமே வேண்டாம் என்கிற வேண்டு - விருப்பத்தை பவர் போர்த்திக் காத்துக் கொள்வதால் நோய் செய்யார் = பிறருக்குத் தீமைகளைச் செய்யமாட்டார்