பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/505

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


504 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: நோய் - துன்பம், குற்றம், வேதனை மேலவாம் - பெரியதன்மை, வான்தன்மை; வேண்டு விரும்ப பவர் - மூடுகை, போர்த்தல் முற்கால உரை: இன்னாதனவெல்லாம் பிரிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தால் மேலவாம் அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார் பிரிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். தற்கால உரை: துன்பம் எல்லாம் முன்பு பிறர்க்குத் துன்பம் செய்தார்மேலே சேர்வனவாகும். ஆதலால் பின்பு துன்பப்படாமல் வாழ விரும்புபவர்கள், இப்பொழுது இதற்குத் துன்பம் செய்ய மாட்டார்கள். புதிய உரை: துன்பங்களுக்கு எல்லாம் வேதனை தந்து விரட்டுகிற பெருந்தன்மை மிக்க அறன் ஆனவன், தனக்குத்துன்பமே வேண்டாம் என்கிற, விருப்பத்தைப் போர்த்திக் காத்துக் கொள்வதால், பிறர்க்குத் தீமைகளைச் செய்யமாட்டான். விளக்கம்: வாழ்க்கையில் சுகம் கொடுப்பது செல்வம், பதவி, அதிகாரம் போன்றவைகள் அல்ல. உடலால் சந்தோசம். மனதால் மகிழ்ச்சி. ஆன்மாவால் களிப்பு. இவை இருந்தால்தான் ஒருவன் சுகமாக வாழ்கிறான். அவன் வாழ்க்கை சொர்க்க பூமியாக அமைகிறது. மனிதப் பிறவி எடுத்த மாபெரும் புண்ணியத்தை, அவன் தினம், தினம் ருசிக்கிறான். ரசிக்கிறான். அப்படிப்பட்ட உயர்ந்த வாழ்வை ஒருவன் வாழ வேண்டும் என்பதற்காகவே, பத்தாவது குறளில் தீமையை விரட்டு. தேகத்திற்கு இன்பங்களைத் திரட்டு! என்று வான்புகழ் கருத்துக்களை வள்ளுவர் வாரி வழங்குகிறார்.