பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/510

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை ᎼᎺ9 யாதெனில் - என்ன என்றால் யாது - அரக்கத்தனமாக ஒன்றும் - ஓர் உயிரையும் கொல்லாமை = கொல்லாததை சூழும் ஆலோசனை செய்து (ஏற்று) நெறி = நிமிர்ந்து நிற்றலே ஆகும். சொல் விளக்கம்: நல்லாறு - நல்லவழி, நெறி நிமிர்ந்திரு படுவது - புலப்படுவது, மனதில் தோன்றுவது யாது - இராக்கதம்; சூழும் ஆலோசனை பண்ணுதல் முற்கால உரை: மேற்கதி வீடுபேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாதென்றுவினவின், அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை யாகிய அறத்தினைக் காக்கக்கருதும் நெறியேயாகும். தற்கால உரை: நல்ல நெறியென்று சொல்லப்படுவது எது என்று கேட்டால், எந்த ஒரு உயிரையும் கொலை செய்யாமை என்னும் அறத்தைப் போற்றி நிற்கும் நெறியே ஆகும். புதிய உரை: வாழ்வுக்கு நல்ல வழியென மனதில் புலப்படுவது என்ன என்றால், அரக்கத்தனமாக எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதை யோசித்து அதன் வழி நிமிர்ந்து நடத்தலே ஆகும். விளக்கம்: கருணை சிறிதும் இல்லாமல் கண்ட உயிர்களைக் கொல்லும்போது மனதில் கொண்ட வெறித்தனத்துக்கு, கரைகானா இன்பம் கிடைத்தது என்பது மனித மனத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். அது அளவிலா சந்தோசமல்ல. அற்ப சந்தோசம். அதில் நிற்பதும், நிலைப்பதும், நெஞ்சிலே நஞ்சினைக் குவிக்கும் செயலாகும். ஆகவேதான், அருளில் இருந்து வழுவுகிற நிலையை அரக்கத்தனம் என்றார். அாக்கத்தனம் வந்து விட்டாலே முரட்டுத்தனமும், முட்டாள் தனமும் முட்டி மோதிக் கொண்டு பீறிட்டுக் கிளம்பும். ஆகவேதான், யோசித்து, கொல்லாமை ஒழுக்கத்தைக் கைக் கொள்ளுங்கள். அதிலே நெஞ்சத்தை ஒருநிலைப்