பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52() டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ᏍᎩᏃ புல்லறிவின் பேராதிக்கம் ஆன்ம ாவின், ஆற்றலை, பு ரையோட வைக்கும். மனதின் ஆற்றலை மண்மூடச் செய்யும். உடம்பின் உயர் எழுச்சியை ஒரம் போக்கிவிடும். ஆகவே நிலை இல்லாத பொருளின் மீது நெஞ்சத்தால் அலைபாயாதே என்று முதல் குறளில் படிப்போரை வினாக்குறிக்குள் விட்டுவிடுகிறார். 332. கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந்து அற்று. பொருள் விளக்கம்: கூத்தாட்டு = மகிழ்ச்சியை மிகுவிக்கும் நடனம், நாடகம், கூத்தில் அவைக் குழாத்து = கூடிக்கலையும் கூட்டம் போல பெருஞ் செல்வம் - இன்பம், கல்வி, அழகு, செல்வம் இவற்றை உடைய பெரிய வாழ்க்கையின் போக்கும் = விதமும் விளிந்து அற்று = கேடுகளை விளைத்து அழிந்துபோகும் சொல் விளக்கம்: கூத்தாட்டு = மகிழ்ச்சிமிகு நடனம், நாடகம் குழாம் - கூட்டம்; அவை - அறிவு: செல்வம் = வாழ்க்கை விளிந்து - சாவு, கேடு. முற்கால உரை: ஒருவன் மாட்டு பெரிய செல்வம் வருதல், கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் சான்றோர் குழாம் வந்தாற் போலும், அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்த வழி, அக் குழாம் போயினாற் போலும். தற்கால உரை: கூத்தாடும் அவைக்களத்தில் மக்கள் கூட்டம் முதலில் வந்து சேருவதும், இறுதியில் கலைந்து போவதும் போன்றது, செல்வம் ஒருவனிடம் வருங்காலத்தில் வந்து, போகும் காலத்தில் அடியோடுபோய் விடும் என்பதும் ஆகும். புதிய உரை: கல்வியும், அழகும், இன்பமும் மிகுந்த பெரிய வாழ்க்கையும், கூத்தாடும் சபையில் கூடி, இருந்து கலைந்து போவது போல பெருகிய வாழ்க்கையும் பின்பு குலைந்து போகும். இன்பவாழ்வின் எல்லையில்லாப் பெருக்கமும் குலைந்து அழிந்து போகும்.