பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை Ö20 உணர்ந்து, வருங்காலமானது வருத்த வாழ்வைச் சந்திக்காமல், முன் கூட்டியே சிந்தித்து நன்றாக வாழ்கிறபோதே நல்ல வினைகளைச் செய்வதைத் தொடர வேண்டும். அதுவே அவரது இன்றைய வாழ்விற்கு புலமாகி. நாளைய வாழ்விற்கும் பலமாகி, வளமான வாழ்வை வாரி வழங்கிவிடும் என்று, ஐந்தாம் குறளில் அருமையாக உணர்த்துகிறார். 336. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு பொருள் விளக்கம்: நெருநல் = சற்றுமுன் உளன் = மெய்யாகவே இருந்தான் இந்த ஒருவன் = ஒப்பற்றவன் இன்றில்லை - இப்பொழுது இறந்துவிட்டான் என்னும் - என்கிற உலகு உடைத்து = மக்களைத் தோற்கடிக்கின்ற பெருமை = வெற்றியை உடையது உலகு சொல் விளக்கம்: நெருநல் - சற்றுமுன்; உளன் = மெய்மை: ஒருவன் ஒப்பற்றவன் இல்லை - சாதல்; இன்று - இப்பொழுது: என்னும் யாவும் பெருமை = iறு, வெற்றி, உடைத்து = வெளிப்படுத்து உலகு = மக்கள், ஒழுக்கம். முற்கால உரை: ஒருவன் நெருநல் உளனாயினான். அவனே இன்றில்லை ஆயினான் என்று சொல்லும் நிலையாமை நீதி உடைத்து இவ்வுலகம். தற்கால உரை: நேற்று ஒருவன் இருந்தான். அவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும், நிலையாமை என்னும் பெருமையை உடையது இவ்வுலகம். புதிய உரை: ஒப்பற்ற ஒருவன் சற்றுமுன் இருந்தான். இப்பொழுது இறந்து போனான் என்று மக்களைத் தோற்கடித்து வெற்றி மமதையுடன் விளங்குகிறது இந்த உலகம்.