பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/528

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை H, புதிய உரை: -, er er r? - = - . " ή 3) ேெr o * .ெ எநதக காலக கடடத தல வாழி கறோம எனறு அற நது தெரியாதவர்கள் பல கோடி எண்ணங்களை வைத்துக் கொண்டு திண்டாடி சிதைகிறார்கள். அதைச் சிந்தித்தால், வா ழ் வின் இளமையும் அதுகூறும் புதுமையும் புரியும். விளக்கம்: ஒரு பொழுது என்றவுடன் எல்லோரும். சிறு பொழுது, காலநேரம் என்று உரை கண்டு இருக்கின்றனர். ஆனால் பொழுது என்பதற்கு, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்தையும் குறிக்கும் சொல்லாக அமைந்திருக்கிறது. ஒரு மனிதன் ஒரு கால கட்டத்தில்தான் வாழ முடியும். இன்றைக்கு வாழ். நேற்றைய நிகழ்ச்சிகளை நினைத்து, நெருப்பில் துடிப்பதுபோல் துடிக்காதே. நாளைக்கு எண்ணிக் கொண்டு வாடாதே என்ற வாழ்வு முறைதான் எல்லோரும் எதிர்பார்க்கின்ற சிறந்த வாழ்க்கை முறையாகும். மூன்று காலங்களையும் மனதில் போட்டுக் கொண்டு குழம்பாமல் ஒரு கால கட்டத்தை தான் மனதில் வைத்துக் கொண்டு, அந்தக் காலத்திற்கு ஏற்ப வாழவேண்டும் என்பதைத்தான் வள்ளுவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். மனதில் பல கோடி எண்ணங்கள் வரும். அவை எல்லாம் வாழ்வுக்கு உதவாது. வாழ்க்கையை நொறுங்கடித்து விடும். ஒருகாலத்தில் வாழ்வதற்கு நீங்கள் முயற்சிக்கும் போது, உடலின் இளமையும், புதுமையும், மேன்மை தரும் விஷயமும் நன்கு புரியும் என்கிறார் வள்ளுவர். 338. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு பொருள் விளக்கம்: குடம்பைதனித்து = நீர் நிலையில் இருந்து தனித்து புள் = நீர்ப்பறவை பறந்து - அவசரப்பட்டு, விரைவாக ஒழியுஅற்றே - நீங்குவதுபோல உடம்போடு = ஆசையில் வருந்தும் உடலோடு உயிரிடை - உயிர் கொண்டிருக்கிற நட்பு - தொடர்பும் (அப்படித்தான்) இருக்கிறது