பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/531

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Ꮌ30 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

  • M. -

o புத்துணர்ச்சி பெறுகின்ற ஆன்மாவும், பூரிப்புப் பெறுகின்ற

அவயவங்களும் , எதிர்ப் படும் புதுமையானவைகளைச் சிந்திக்கின்றன. இளமையானவைகளைச் சந்திக்கின்றன. அறைகுறை உறக்கம், உடலை அலைக்கழித்துச் செயல்ப முடியாமல் செய்துவிடும். நிறைவான துக்கமே மெய் நிலைக்கு குறைவற்ற செல்வமாக அமையும். 340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு பொருள் விளக்கம்: உடம்பினுள் - உடம்பின் உள்ளே துச்சில் இருந்த உயிர்க்கு தங்குமிடமாகக் கொண்டிருந்த உயிருக்கு புக்கில் = புகலிட வீடாக அமைந்தின்று அமைந்து இருந்தாலும் கொல்லோ - பூட்டுமில்லை, தாழ்ப்பாளுமில்லை சொல் விளக்கம்: புக்கில் புகலிடம், தங்குமிடம், வீடு, உடல் கொல்லோ = பூட்டு, தாழ்ப்பாள் துச்சில் தங்குமிடம், சரீரம், ஒதுக்கிடம் முற்கால உரை: வாத முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போன்ற உயிர்க்கு எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும். தற்கால உரை: உடம்பின் ஒரு பக்கம் ஒதுக்கமாகவே குடியிருந்துவரும் உயிருக்கு, எப்போதும் நிலையாகக் குடியிருந்து வாழும் இல்லம் ஒன்று இதுவரையில் அமைந்திட வில்லை போலும். புதிய உரை: உடம்பு முழுவதும் உலாவருகின்ற உயிருக்கு, உடல் தங்கும் இடமாக இருந்தாலும், அந்தப் புகலிடமாகிய வீட்டில், அந்த உயிரைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ ஏற்றதுபோல ஒரு பூட்டும் இல்லை. தாழ்ப்பாளும் இல்லை.