பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/535

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


う34 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ○óー H ஆன்மாவிலே தெளிவின் வெகுமதியும் நிரம்ப, அவன் நோதல் H H - H # - == _ - - - T o இல்லாமல், நோய்களும் இல்லாமல் கிறைவாழ்வு வாழ முடிகிறது என்பதை வள்ளுவர் முதற் குறளில் விளக்குகிறார். 342. வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டு இயற்பால பல பொருள் விளக்கம்: வேண்டின் = விரும்புகிறபோதே உண்டாக - ஒருமுடிவாக துறக்க = தீயவற்றைக் கைவிடுக துறந்த துறந்தவுடன் பின் வருங்காலத்தில் இயல்பால் = ஒழுக்கத்தால் ஈண்டு - விரைவாக பாலபல = பல முறையிலும் (எடுத்தமுடிவை) பலப்படுத்துக. சொல் விளக்கம்: வேண்டின் விரும்புதல்; உண்டாக ஒருமுடிவாக துறக்க = கைவிடுக; பின் = பிற்காலம் ஈண்டு - விரைவாக, இயல்பால் ஒழுக்கத்தால் பல = பலப்படுத்திட முற்கால உரை: எல்லாப் பொருள்களையும் துறந்தால் ஒருவர்க்கே இம்மைக்கண்ணே உறவாம், முறைமையை உடைய இன்பங்கள் பல. அவ்வின்பங்களை வேண்டின் அவற்றைக் காலம் பெறத்துறக்க தற்கால உரை: ஒருவனுக்குத் துன்பம் இல்லாத நிலமை ஏற்பட வேண்டுமானால், எல்லாவிதப் பொருள்களும், இருக்கும் காலத்திலேயே அவன் துறந்துவிட வேண்டும். துறந்த பின் இவ்வுலகில் அவன் பெறக் கூடிய உயர்ந்த இன்பங்கள் பலவாகும். புதிய உரை: நீ விரும்புகிற போதே ஒரு முடிவோடு, தியனவற்றைத் துறக்க வேண்டும். அப்படித் துறந்து விட்டால் வருங்காலத்தில், தியன திரும்பாமல் உன் ஒழுக்கத்தால் விரைவாகப் பலப்ப இத்திக் கொள்ள வேண்டும்.