பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை Fo சொல் விளக்கம்: இயல்பு - ஒழுக்கம்; நோன்பு = விரதம் ஒன்றின்மை = யாதொன்றிலும் பற்றில்லாமை உடைமை = உரிமை; மயல் பயம், மயக்கம் முற்கால உரை: பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல் பாம், அஃதன்றி ஒன்றாயினும் உடமை, அத்தவத்தை போக்குதலான், மீண்டும் மயங்குதற்கு ஏதுவாம். தற்கால உரை: யாதொரு பொருட்பற்றும் இல்லாமல் இருத்தல், தவம் செய்வதன் இயல்பாகும். ஏதேனும் ஒரு பற்றுடையராக இருந்துவிட்டால் மீண்டும் பொருள்மீது ஆவல் கொண்டு மயங்குவதற்கு வழி ஏற்பட்டு விடும். புதிய உரை: ஒழுக்கத்தை நிலை நிறுத்தும் விரதத்திற்கு, யாதொன்றின் மீதும் பற்றில்லாத நிலையே வேண்டும். அந்த விரத உரிமையைப் பின்பற்ற விடாமல், பயமும், புலன் மயக்கமும், ஆசைகளைக் கிளப்பிவிட்டுத் திசை திருப்பிவிடும். விளக்கம்: - ஒழுக்கம் என்பது சாதரண சிறு செயல் அல்ல. உயர்ந்த தவ நெறியைப் போன்றது. உன்னதமான விரத வேள்வியைக் கொண்டது. சத்திய சோதனை போல, நித்தியம், நோய்களும், நோவுகளும் வந்தாலும், உத்தமமாகக் கடைப் பிடிக்க வேண்டிய உயிர் நெறியாகும். அந்தப் பெருமையைத் தான், நோன்பு ஒன்றின்மை என்று குறிக்கிறார். அந்த விரதப் பெருமையை, தவ உரிமையை, அற்ப ஆசை என்னும் கனல்போன்ற காமக் கதிர்களும், மாசுகள் என்னும் வண்ணத்துள்களும் வந்து மனதைத் துண்டிவிடும். விஷப்பற்களால் தீண்டிவிடும். நமது வாழ்வின்விசையை மாற்றித் திசைதிருப்பி விடும். அதில் மயங்கிவிடக் கூடாது. மயங்குகின்ற நிலைதான் எப்பொழுதும் மனதிற்கு உண்டு என்பதால், மனதை அடக்கும் மணியான மந்திரமாக, பற்றின்மையை நான்காவது குறளில் இலக்கணமாகக் கூறுகிறார்.