பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/540

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 539 பல தீவினைகளில் அரக்கத்தனமான (யாது) கொடுமை நிறைந்தது காம நுகர்ச்சி என்று குறிப்பிட்டு, அது கண்டவனை கம்மா விடாது. கொண்டவனைக் கொல்லாமல் போகாது என்று, உடல்காக்கும் உபாயத்தை, ஐந்தாவது குறளில் கூறுகிறார். காட்டுத் தீயைப் போல காமத் தீ ஒருவனை அழிப்பதால், அவனை அழிக்க யாருமே தேவையில்லை. அவனே அழிந்து போவான் என்று இந்தக் குறளிலே கோடிட்டுக் காட்டுகிறார். ஆசையால் வதங்குகின்ற ஆசைப்படாத உடம்பே ஒருவனைக் காப்பாற்றும் என்பதால், மெய்யுணர்வு கொண்டு தீப்பையான தீமைகளை புறந் தள்ளுங்கள். என்று பாடம் புகட்டுகிறார். பொய்யா மொழி புலவர். 346. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் பொருள் விளக்கம்: யான் என = நான் என்று தென்னும் = கொந்தளித்துக் கிளப்புகிற செருக்கு = அகங்கார, ஆணவத்தால் அறுப்பான் = அழித்து விடுபவனின் (புகழ்) வானோர்க்கு = வலிமையும் பெருமையும் உடையவர்க்கு உயர்ந்த அறிஞர் பெருமக்களாகிய சான்றோரிடையே உலகம் புகும் - நன்மக்கள் மனதில் உட்சென்று அவர்களிடையே தங்கிவிடும் சொல் விளக்கம்: தென்னும் - கொந்தளிக்கிற: செருக்கு அகங்காரம், ஆணவம் வான் = வலிமை, பெருமை; உயர்ந்த அறிஞர் பெருமக்கள் உலகம் = உலகத்து நன்மக்கள் முற்கால உரை: தான் அல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை என தென்றும் கருதி, அவற்றின் கண் பற்றுச் செய்வற்கு ஏதுவாகிப் மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கும் எய்தற்கறிய வீட்டு உலகத்தை எய்தும். தற்கால உரை: யான் என்னும் அகப் பற்றையும் , எனது என்னும் புறப் பற்றையும் நீக்குபவன், வேறு பல வகைகளில் இயல்பான