பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வான்புகழ் கொண்டவர்களைக் காட்டிலும் மேலானதொரு புகழ் உலகத்தை அடைவான். புதிய உரை: தன்னைப் பற்றிய கொந்தளிப்பு மிக்க ஆணவத்தின் ஆரவாரத்தை அடக்கி அழிப்பவன், வலிமையாளனாக விளங்குவதால், அவனது பீடும், பெருமையும் சான்றோர் உலகமாகிய உள்ளத்தில் உட்சென்று உயர்வைத் தரும். விளக்கம்: யான் என்ற நினைப்பு ஞான மில்லாதவன் செயல். அது நாணமில்லாதவனுக்கு ஆபரணம். கலங்கிய புத்தி உள்ளவனின் கூட்டாளி. அந்த நான் என்னும் செருக்கு கொந்தளிக்கும் ஆணவமாக, ஆரவாரிக்கும் அகங்காரமாக, புயலாகப் புறப்படுகிற இறுமாப்பாக விளங்குவதால், அதை அழிப்பதற்கு ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றல் உடையவனே திறமை மிக்க வலிமையாளன் ஆகிறான். அவன் தீமையைத் துறப்பதில் பெற்ற வெற்றியானது எட்டுத்திக்கும் பரவுகிறது. சான்றோர்கள், பெரியோர்கள், நாடுபோற்றும் நன்மக்கள் உள்ளத்திலே அவன் புகழ் புகுந்து பரவுகிறது. அவர்கள் கொண்டகளிப்புடன் கூடிக் குலாவுகிறது. ஆகவே, ஆறாவது குறளில், காமத்தை வென்றவன், தீமைகளின் நாமத்தைக் கொன்றவன், உலகிற் பிறந்த பேற்றினைப் பெறுகிறான் என்று பெருமை பொங்கச் சொல்லுகிறார். 347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு பொருள் விளக்கம்: பற்றி = உலக ஆசைகள் உள்ளும் புறமும் விடாஅ = விடாமல் தொடருகிற தவர்க்கு = தீய செயல் புரிவோருக்கு இடும்பைகள் = வறுமை, நோய், பயம் முதலியவைகள் பற்றினை = அதன் காரணமாக பற்றி பற்றிக் கொண்டு விடாது விடாது அழித்துவிடும்