பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/544

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 349. பற்று அற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். பொருள் விளக்கம்: பற்றற்ற = உலக ஆசைகள் இல்லாமல் கண்ணே - அவரவர் உடம்பே பிறப்பு அறுக்கும் - ஆசையின் முனையையே அழித்துவிடும் மற்று - அதனால் மெய்நிலை = அழிக்கும் ஆற்றல் பெற்ற மெய்நிலையானது காணப்படும் = (அவரவர் ஆற்றலுக்கேற்ப) வெளிப்படும் சொல் விளக்கம்: பற்றற்ற = உலக ஆசைகள் அற்ற, கண் - உடம்பு பிறப்பு - ஆரம்பம், முனை: காணப்படும் = வெளிப்படும் முற்கால உரை: ஒருவன் இருவகைப் பற்று அற்றபொழுதே அப் பற்றுறுதி அவன் பிறப்பை அறுக்கும். அவை அறாத பொழுது அவற்றால், பிறந்து இறந்து வருகிற நிலையாமை காணப்படும். தற்கால உரை: அகப்பற்று, புறப்பற்று ஆகிய இருவகைப் பற்றுக்களையும் விட்ட உடனேயே அந்த பற்றற்ற தன்மை தொடர்ந்து துன்பங்கள் தோன்றாமல் செய்து விடும். அப்படி நிகழாதபோது தீமையின் தோற்றம், அழிவு ஆகியவைகளைப் பொறுத்து நிலையாமை காணப்படும். புதிய உரை: உலக ஆசைகளை அறுத்து அழிக்கின்ற உடம்பிற்கு அதன் உண்மை நிலையும், அழகும், உயர்வு எல்லாம் அங்கே மிகுதியாக வெளிப்படும். விளக்கம்: ஆசைகள் என்பது மனதின் குணம் என்பார்கள். அதையே மிகக் கடுமையாக, மனதின் தீக் குணம் என்பார்கள். சரமாரியாக விடுகிற அம்பு என்பார்களே, அதுபோலே குதித்துக் கொட்டும் அருவியாக, மனதை உதைத்துக் கொண்டு வெளியே வருகின்றன அசைகள். நினைத்தவுடன் பாடுகிற ஆசு கவிபோல, கண் விழித்தவுடன் கூடிக் கும்மாளம் இடுவதுதான் ஆசையின் பண்புகளாகும்.