பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/547

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


546 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ( ) لري 36. மெய் உணர்தல் மெய் உணர்தல் என்றதும் பிறப்பு, மற்றும் வீடுகளுக்கான காரணங்களை உண்மையால் உணர்தல் என்று பரிமேலழகரும், உலகில் உள்ளவற்றையெல்லாம் உள்ளபடியே கண்டறிந்து உண்மையை உணர்தல் என்று இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்களும் பொருள் கொண்டிருக்கின்றனர். நாம் ஆய்வோடு இத்தலைப்பை அணுகுகிறபோது, வித்தியாசமான குறிப்புடனும், வீறுபெற்ற கருத்துடனும் ஒளிர்வதை நம்மால் உணரமுடிகிறது. மெய்+உணர்+தல், என்று மெய் உணர்தலை மூன்று சொற்களாகப் பிரித்து இருக்கிறோம். மெய் என்றால் உடல் என்றும், உணர் என்றால் கற்றறி, விழித்தெழு என்றும், தல்' என்றால் தந்திரம், உபாயம் என்றும், உபாயம் என்றால் போர்க்கவசம் என்றும் பொருள் வருகிறது. உடலைக் காக்கின்ற போர்க்கவச உத்திகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதைத்தான் மெய் உணர்தல் என்று குறிப்பிட்டு இருக்கிறார். யோகம் என்பது மெய்காக்கும் யாகம். மெய்க்கு எந்த ஊறுகளும், காயங்களும் ஏற்படாமல் காக்கின்ற போர்க்கவசம். உடலை உயர்வாக வைத்திருக்க உதவுகிற உபாய சாகரம். அப்படிப்பட்ட அருமையான கருத்துக்களை மெய் உணர்தலில் எழுதிய வள்ளுவருக்கு, இதன் பிறகுதான் பொருட்பால் எழுதுகிற உத்வேகம் பிறந்திருக்கும் என்று நாம் நம்புகிறோம். தீமைகளைத் துறந்தார்க்குத் தேகமே திவ்ய விருந்தாக அமையும் என்பதால்தான், துறவுக்குப்பிறகு மெய் உணர்தல் அதிகாரத்தை வைத்திருக்கிறார்.