பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 547 351. பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும் மருளான்.ஆம் மாணாப் பிறப்பு பொருள் விளக்கம்: பொருள் = மெய்யாகிய உடலைத் தவிர அல்லவற்றை வெறுமை உடைய பொருள் என்று வாழ்வு தரும் செல்வமென்று, மற்றவற்றை உணரும் = அறிந்துகொண்டு இருக்கிற மருள் + ஆன் - மதிகலங்கிய ஆன்மாவை உடையவனுக்கு மாணாப் பிறப்பு = மாட்சிமை இல்லாத வாழ்வே அமைகிறது சொல் விளக்கம்: பொருள் = பொன், உடம்பு; வற்றை = வெறுமை மருள் = மதிகலங்கிய; ஆன் - ஆன்மா மாணா = மாட்சிமை இல்லாத முற்கால உரை: மெய்ப் பொருள் அல்லவற்றை மெய்ப் பொருள் என்றுணரும், விபரீத உணர்வானேல், இன்பமில்லாத பிறப்பு உளதாம். தற்கால உரை: மெய்ப் பொருள் அல்லாதவற்றை மெய்ப் பொருள்தான் என்று தவறாக என்னும் மயக்க அறிவினை உடையவன், சிறப்பில்லாத உயர் வாழ்வு வாழ்பவன் என்று பிறரால் கருதப்படுவான். புதிய உரை: மெய்யான உடலைத்தவிர மற்ற பொருளை எல்லாம், துணை என்று நம்புகிற மதிகலங்கிய ஆன்மா உடையவன், மாட்சிமை இல்லாத வாழ்வையே அடைவான். விளக்கம்: உலகத்துப் பொருட்களை எல்லாம் தனக்கு வேண்டும் என்று தாண்டிக் குதிக்கிற மனோபாவம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. பொருளைத் தேவைக்குச் சேர்க்கிறவன் என்பதைவிட, மலைபோலக் குவிக்கிறவன் என்பதில்தான் மனநிம்மதி இருக்கிறது என்று மனிதக் கூட்டம் நம்பிக் கொண்டு வாழ்கிறது. அப்படி எண்ணுகிறவர்களின் ஆன்மா அலறித் துடித்து. அறற்றிக் கொண்டு இருக்கிறது. அந்த அறற்றல்களும், அழுகையும் ஆன்மாவின் பலத்தைக் குறைக்கிறது. அதனால் ஆன்ம சக்தி மறைகிறது.