பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/550

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 549 கொண்டு கிடப்பதால் அகத்திலே வறட்சிதான் நிலவுமே தவிர, மகிழ்ச்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் தான், பாசமலங்களை மனது உள்ளவரை பைசாசம் என்றனர். அதாவது எதற்குமே ஒத்துவராத பேய்க் குணம். ஆக, பேய்க் குணத்தை விரட்டுபவரே பேரின்பம் பெறுவர். அற்புதமான அறிவினைத்தான் காட்சி என்பார்கள். அதனாலே வள்ளுவர் அறிஞர்களைக் குறிக்க, 'காட்சியவர் என்ற ஒரு சொல்லாலே இங்கே குறிப்பிடுகிறார். காட்சியவர் அகத்திலே மாட்சிதான் ஆட்சி செய்யும். அதுதானே இயற்கை. அந்த இயற்கையைத்தான் இரண்டாவது குறளில் வள்ளுவர் வகைப்படுத்தி விளக்குகிறார். 353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நனியது உடைத்து பொருள் விளக்கம்: ஐயத்தின் = தீயவை பற்றிய சந்தேகங்களை நீங்கி = விலக்கி தெளிந்தார்க்கு = தேகத்தைப் பற்றிய தெளிவான அறிவு ... உடையவருக்கு s வையத்தின் = வாழ்கின்ற இந்த உலகத்தின் வானம் = அமுதமானது நணியது உடைத்து - அவரோடு ஒன்றிக்கலந்து உண்டாகிக் கொண்டே இருக்கும் சொல் விளக்கம்: ஐயம் = தீயவை பற்றிய சந்தேகம் தெளிந்தார் - தேகம் பற்றிய தெளிவு உடையார் வானம் = மழை, அமுதம்: நணியது - அண்மையில் உள்ளது முற்கால உரை: ஐயத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு, எய்தி நின்ற நில உலகத்தினும், எய்தக்கடவதாய வீட்டுலகம் நளிைத்தாதல் உடைத்து. தற்கால உரை: ஐயப்பாட்டிலிருந்து நீங்கி, மெய்யணர்வு பெற்றவர்களுக்கு குறைந்த அளவே பார்வையில் படும், இந்த நடைமுறை உலகத்தைவிட, பரந்த அளவு இயற்கைப் பெருவெளியே கூட மிக நெருக்கத்தில் இருப்பதாகவே கருதப்படும்.