பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 557 சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள், அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப்பின்சாரமாட்டா. தற்கால உரை: ஒருவன் தன்னைச் சாரக்கூடிய பொருள்களின் தன்மைகளை மெய் உணர்வின் மூலம் அறிந்து, அவற்றின் மேல் பற்றுக் கொள்ளாமல் நடப்பானாயின், அவனைச்சாரக் கூடிய துன்பங்கள் அவனது உணர்வினை அழித்துச் சாரமாட்டா. புதிய உரை: உடலைத் துணைபெற்ற முக்கியத்துவத்தை உணர்ந்து ஒருதலைப் பட்சமில்லாமல் உண்மையான ஒழுக்க வாழ்வு வாழ்கிறபோது, பிற தீமைகள் அவனைச் சேரமாட்டா. விளக்கம்: உடலிலே ஏற்படுகின்ற மாற்றங்கள், வேதனைகள் ஆறு. ஆன்மாவின் அமைதியைக் கெடுத்து வேதனைக்குள் வீழ்த்தி அலறித் துடிக்கவைப்பவைகள் பன்னிரண்டு. இவைகள் யாவையென்பதை முன்னரே தெரிவித்திருக்கிறோம். கண்டு தெளிக. மனதிலே ஏற்படுகின்ற மாசுகள், மனதைக் கெடுக்கும் கேடுகள் ஆறு. இந்த மூன்றுவித வேதனையால்தான் ஒரு மனிதன் மெலிகிறான், நலிகிறான். அழிகிறான். இவற்றிலிருந்து விடுபட, நீங்கள் உறுதியாக உடம்பைக் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவற்றின் சாகசங்களை வெல்லுங்கள் என்பதாக ஒன்பதாம் குறளில் வள்ளுவர் உறுதிபடக் கூறுகிறார். 360. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் பொருள் விளக்கம்: காமம் = உலக இச்சையில் ஊறி, விரும்பிய பொருளாசையில், வெகுளி = அவைகள் கிடைக்காத பொழுது ஏற்படுகின்ற சினம் மயக்கம் - கொடுக்கிற மதிமயக்கம் இவை மூன்றன் - உடலில் ஏற்படுகின்ற இந்த உட்பகை மூன்றின் நாமம் கெட நினைப்பு அழிய கெடும் நோய் - துன்பங்கள் எல்லாம் அழிந்துவிடும் சொல் விளக்கம்: நாமம் = நினைப்பு, இணக்கம், ஐயம்