பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/559

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ᎼᎼ8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா X முற்கால உரை: ஞானயோகங்களின் முதிர்ச்சி உடையார்க்கு விழை, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூட கெடுதலான். அவற்றின் காரிய மாய வினைப்பயன்கள் உளவாக, தற்கால உரை: காம வெறுப்பு, கடும் சினம், மயக்க அறிவு ஆகிய இக்குற்றங்கள் மூன்றினுடைய பெயர்களும் கெட்டொழியும் படியாக நடந்து கொண்டால், துன்பங்கள் பலவும் வராமல் கெட்டொழிந்து விடும். புதிய உரை: உட்பகையாகிய காமம், வெளிப் பகையாகிய சினம், ஆன்மப் பகையாகிய மயக்கம், இந்த மூன்றின் நினைப்பை அழித்து, இணக்கத்தை ஒழித்தால்தான், உடலில் ஏற்படுகின்ற வாதைகள், வேதனைகள் எல்லாம் மறைந்தொழியும். விளக்கம்: து. காம உணர்வை வெல்ல முடியாது, கட்டுக்கடங்காமல் வரும். கோபத்தையும் தள்ளமுடியாது. எப்பொழுது மதிமயங்குகிறது. எப்பொழுது புத்தி கலங்குகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. கடலில் சூள் கொள்ளும் சூறாவளிபோல மனிதர்களைக் கலங்க அடிக்கின்ற இந்த மூன்றையும், தள்ளவும் முடியாது. வெல்லவும் (ԼՔւգ եւյո3,/. சிங்கத்தை அதன் குகையிலேயே அடக்கிப் பிடி என்பார்கள். குகைவிட்டுக் கிளம்பிய சிங்கத்தை பகையெதுவும் தடுத்து நிறுத்த முடியாது. அதுபோலப் பகையாக, விஷப் புகையாக இருந்து வெளிவருகிற, காமம், சினம், மயக்கம் இம்மூன்றையும், அவைகள் தோன்றுகிற இடமாகிய சிந்தையிலேயே அழித்து விடவேண்டும். அந்த நினைப்பை எரித்து விடவேண்டும். அதனால்தான், நாமம் கெட என்றார். நாமம் என்றால் இங்கே பெயர் என்ற பொருள் இல்லை. அந்த நினைவு கெட என்பதையே நாமம் கெட என்றார் வள்ளுவர்.