பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/560

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 37. அவா அறுத்தல் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அது வேண்டுமென்று விரும்புகிறோம். அது கிடைத்தால் மகி ழ்கிறோம். கிடைக்கா விட்டால், மறந்து விடுகிறோம். அதற்குப் பெயர் விருப்பம். ஒரு பொருளை விரும்புகிறோம். அது வேண்டும் என்ற விருப்பமானது வேகம் பெறுகிறது. அது எந்த சூழ்நிலையிலும் மனதைவிட்டு நீங்காமல், சுரந்து கொண்டே இருப்பதால், அது மாசாகிறது. இந்த மாசு ஆக வாக வடிவெடுத்து ஆசையாக மாறிவிடுகிறது. உண்டாகிற ஆசை, நல்லதாக இருந்து, நல் வினையாக மாறினால் அதற்கு வேட்கை என்று பெயர். உண்டாகின்ற ஆசை தீயதாக இருந்தால், தீவினையாக அமைந்தால், அதற்கு வெறி என்று பெயர். இந்த வெறியைத்தான் வள்ளுவர் மிக அழகாக அவா என்று அழைக்கிறார். அவாவுவது என்றால் இச்சித்தல் அதாவது மனித மாண்பிலிருந்து கீழிறங்கிவிடுதல். பேராசை கொள்ளுதல். விடாது பற்றிக் கொள்ளுதல். ஆசைப் பெருக்கம் என்ற அவாவினை, திருமூலர் மிக அழகாகச் சாடிப் பாடியிருக்கிறார். 'ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே ' மனிதர்களுக்கான துன்பங்களுக்கெல்லாம் மூல காரணமாக அமைந்திருப்பது அவாதான். அவா கொள்ளும்போது, ஆனந்தமான சூழ்நிலை இருந்தாலும், மாறிப்போய் விடுவதால், மனித வாழ்வின் மகத்துவமே அங்கே ஆட்டம் கண்டு விடுகிறது. இதைப்புரிந்து கொண்டால் போதும். ஆனால் பின்பற்ற வேண்டாமா? திருமூலர் ஆசையை விடவிட என்றார். வள்ளுவரோ அவாவை அறுத்தல் என்கிறார். மெய்யுணர்வு மிக்கவரே அவரவை அறுக்க முடியும் என்பதால், மெய்யுணர்வு அதிகாரத்திற்குப் பின் இந்த அதிகாரத்தை வைத்திருக்கிறார்.