பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/566

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை _ தற்கால உரை: பற்றற்றோர்கள் எனப்படுபவ ர்கள் ஆசைகளை விட்டவர்களே ஆவார்கள் ஆனால் ஆசைகளை விடாதோர்கள் பற்றுக்களை அவ்வளவாக விட்டவர்கள் ஆக மாட்டார்கள். புதிய உரை: உல்கப் பொருள்களை இச்சிக்காதவர்களே அவாவை அடக்கியவராவார். இச்சிப்பதைக் கைவிடாத மக்கள் முற்றிலுமாக அவாவினால் அல்லற்படுகிறார்கள். விளக்கம்: மலையிலிருந்து அருவி கொட்டுவதுபோல, மனதிலிருந்து ஆசைகளும் கொட்டுகின்றன. இந்த ஆசை அருவி கொட்டுவதோ, தேனிக்களைப் போல. அவாவினால் ஆளப்படுகின்ற மக்கள், தேனிக்களின் விஷத் தீண்டலால் தேகமெல்லாம், வேதனைகளுடன் திண்டாடிச் சாய்வதுபோல அவாவுக்கு அடிமைப் பட்டவர்களும், கொடுமையான வாழ்க்கையையே அனு பவிக்கிறார்கள். குற்றுயிராய் மடிகிறார்கள். ஆகவே இப் படிப்பட்ட இன்னல் மிகு வாழ்க்கையே வேண்டாம். இதயத்திலிருந்து இச்சையைக் களை எடுத்து விடுங்கள். மனதை ஒரு நிலைப்படுத்துங்கள் என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார். 366. அஞ்சுவது ஒரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஒரும் அவா பொருள் விளக்கம்: அஞ்சுவது - அச்சப்பட்டு 'ஒரும் - ஆராய்ந்து தெளிந்து (அவாவை அழிப்பவன்) அறனே ஒழுக்கமுள்ளவனே ஒருவனை = ஒப்பற்றவனாக இருந்தாலும் ஒரும் தெளிவாக அவா - பேராசையானது வஞ்சிப்பது - வஞ்சித்து அவனை அழித்துவிடு ம் சொல் விளக்கம்: ஒர்தல் ஆராய்ந்து அறிதல், பிரிதல் அறன் . ஒழுக்கமுள்ளவன்; ஒருவன் ஒப்பற்றவன் வஞ்சிப்பது கெடுப்பது