பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: மெய்யுணர்தல் உயிராகிய காரணங்கள் எல்லாம் எய் தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மரபின் வழியாய் புகுந்து பின்னும் பிறப்பின் கண்ணே வீழ்த்திக் கெடுக்க வல்லது அவா. ஆதலால் அவ்வவாவை அஞ்சிக்காப்பதே துறவறமாவது. தற்கால உரை: * ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது அவாவேயாகும். ஆதலால் அந்த அவாவுக்கு அஞ்சி வாழ்வதே அவனது அறமாகும். புதிய உரை: ஒழுக்கம் உள்ளவனின் அஞ்சும் குணம் ஆராய்ந்து தெளிந்து அவாவை அழிக்கும். ஆனால் ஒப்பற்றவனாக இருந்தாலும் அவாவானது அவனை ஏமாற்றித் தெளியவிடாமல் செய்து முற்றுமாக அழித்துவிடும். விளக்கம்: அஞ்சுவதற்கு அஞ்சுவது அறிவுடைமை. அஞ்சாதது ஆணவம். ஆனாவமானது அறிவை மயக்கும். அகங்காரத்தை வளர்க்கும் அற்ப குனங்களை மிகுதிப்படுத்தும். அடாவடிச் செயல்களில் ஈடுபடுத்தும். மனதிலே எரியும் தீயாக, மாசு எரிகிறபோது, அதை மேலும் எரியூட்டும் தூண்டுகோலாக இருப்பது அவாவாகும். ஒழுக்கமுள்ள அறன். உண்மை நிலைக்குப் பயந்து அவாவை புறம்தள்ளுகிறவன். ஆனால் எல்லாத் திறமைகளும் கொண்டிருக்கும் ஒப்பற்றவனாகிய ஒருவன், அவாவுக்குள் ஆட்கொள்ளும்போது அவனை ஏமாற்றி, வேண்டாத வழிகளைக் காட்டி அவனை அழித்து விடுகிறது. தன்விட்டு நெருப்பாக இருந்தாலும் சுடும். நம் வீட்டுத் தங்க ஊசியாக இருந்த ாலும் குத்தினால் வலிக் கும். அதுபோல நமக்குள்ளே தகிக்கிற அவாவும் நம்மைச் சுடும் என்று வள்ளுவர், அவாவின் ஆக்கிரமிப்பு அதிசயத்தை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். 367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும் பொருள் விளக்கம்: அவாவினை - ஆசைப் பெருக்கத்தை ஆ) ) . முற்றலுமாக அறுப்பின் அறுத்து வீழ்த்துவது