பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/572

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை う7l அவனுக்கு எப்பொழுதும் மாறாத தன்மையை உடைய இயற்கை இன்பத்தைத் தரும். புதிய உரை: அவாவை நீக்குகிற ஒருவன் பேரன்பின் இலக்கணமாகத் திகழ்கிறான், அந்த நிலையே அவனுக்கு மிகப்பெரிய தகுதியையும் தந்து கெளரவிக்கிறது. விளக்கம்: அவாதான் அன்பைக் கெடுக்கிறது. மனிதப் பண்பைத் தடுக்கிறது. ஊர்வம்பை விலைக்கு வாங்குகிறது. உடலையும், உயிரையும் வாட்டி வதைத்திருக்கிறது. வருத்த சமுத்திரத்தில் அவனைத்துக்கிப் போட்டுத் திக்குமுக்காடவைக்கிறது. இந்த இழப்பும், உழப்பும் ஈனத்தனமான பிழைப்பும் வேண்டாம் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த வள்ளுவர் இந்தக் குறளில் அவா இல்லாதவன் பேரன்பின் பெட்டகமாகத் திகழ்கிறான். இனிமைக்கு இலக்கணமாக மகிழ்கிறான். அவனைத்தேடிப் பெருமைகளும், தகுதிகளும், பதவிகளும், பாக்கியங்களும், தடைபெறாது வந்து கொண்டே இருக்கின்றன. வாழ்விற்கு வளத்தையும், வற்றாத இன்பத்தையும் வழங்குகின்றன. அறுமின் ஒசைப்படாமல் அவாவின் உயிரை அறுமின். அகமகிழ்ச்சி கொண்டு ஆற்றல்மிக்கவராக எழுமின் என்று, ஆறறிவு படைத்த மனிதர்களை எல்லாம் அழைத்து, அவா அறுத்தல் என்னும் அதிகாரத்தை முடித்து வைக்கிறார்.