பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/577

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


576 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா L7 I's இவை அனைத்திற்கும் அடித்தளமாக, ஆதாரமாக, எழுச்சிப் பிழம்பாக எல்லாவற்றையும் ஏற்று மிகுதிப்படுத்துகிற மேன்மைத் திருவாக அமைந்திருப்பது ஆன்மாவும், மனமும், தேகமும்தான். இந்த மூன்றிலும் முன்பு கற்கும் செயலில் ஈடுபட்டு, கலைஞானம் மிகுந்த வினையாக ஆற்றியிருந்தால்தான், இப்போது அவன் கற்கும் வினைக்கு புத்துணர்ச்சியும், பெருவளர்ச்சியும் ஏற்படும். முன்பு அந்தக் கலை, ஞானச் செயல் வினைகள் இல்லாமல் இருந்தால், இப்போது அவன் மேற்கொண்டிருக்கும், அறிவுச் செயலும் வளராமல் ஆரம்ப நிலையிலேயே இருந்து விடும். கல்வியும், அறிவும் ஒரு நாளில் உண்டாகிவிடுவதல்ல. தொடர்ந்து விடாது, ஆர்வத்தோடு கற்கும் பொழுதுதான் அது வினையாகிக் கை கொடுக்கும் என்று மூன்றாவது குறளில் கூறுகிறார். 374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு பொருள் விளக்கம்: இருவேறு = பெரிய ஒப்பில்லாத உலகத்து = இந்த உலகத்திலே இயற்கை = தகுதிமிக்க பாக்கியம் என்பது திருவேறு = நல்வினைபுரியும் தெய்வீக வாழ்க்கை வேறு தெள்ளியர் ஆதல் = தெளிந்த அறிவுடையர் ஆதல் வேறு = தனியாகும் o சொல் விளக்கம்: இரு = பெரிய, தனி = ஒப்பில்லாத இயற்கை = தகுதி, பாக்கியம்; திரு = நல்வினை, தெய்வீகம் தெள்ளியர் = கல்வியிற் சிறந்தோர் முற்கால உரை: உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு. ஆதலால் செல்வமுடையர் ஆதலும் வேறு. அறிவுடையராதலும் வேறு. தற்கால உரை: உண்மை நட்பு என உலகப்போக்கு இருவகை. எனவே செல்வமும் அறிவும் தொடர்பின்றியும் சேரும். புதிய உரை: ஒப்பில்லாத பெரிய உலகத்தில், தகுதி மிகுந்த பாக்கியம் நிறைந்த வாழ்க்கையில் நல்வினை ஆற்றுகின்ற தெய்வீகப் பண்பு