பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/579

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


: r-" . டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: வாழ்க்கையைச் சொர்க்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்று அவாவுகிற, வெறிகொண்ட ஒருவனுக்கு நல்லவர்கள் எல்லாம் தீயவர்களாகத் தெரிவார்கள். தீயவர்கள் வேண்டியவர்களாக மாறி. அவனது அழிவுக்குத் தீவினை பின்புரமாகச் செயல்படுகிறது. விளக்கம்: இன்னல் ஏற்படாத வாழ்க்கை அமைய வேண்டுமென்று அறிவுடையோர் விரும் புவர். இன்னல்கள் வரவே கூடாது. இன்பமே வேண்டுமென்று பேதைகள் பிரியப்படுவர். பிரயாசைப் பட்டு, பெருந்துன்பப் பெருங்குழியில் விழுந்து கிடப்பர். எப்படியேனும் இன்பத்தையே வாழ்க்கையாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேகமும், வெறியும் கொள்பவர்கள் நல் வினைகளை நசுக்கிப் போடுகிறார்கள். தீவினைகளைத் தேரோட்டமாக்கி திரிய விடுகிறார்கள். இந்தத் தீவினைத் தேரோட்டத்தில் அல்லும் பகலும் போராட்டங்கள் வெடித்து நல்லவர்களை ஒதுக்கிவிடவும், தீயவர்களை அனைத்துக் கொள்ளவும், சந்து பொந்துகளை உருவாக்கி விடுகின்றன. ஆகவே, வாழ்க்கையில் செல்வமென்பது மகிழ்ச்சிதான். வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது நல்வினைகள் தான். நல்வினைகள் ஒருவனுக்கு நிழலாக இருந்து, துணையாகத் தொடர்ந்து, நிலையாகப் பதிந்து, நெஞ்சம் விரும்புகிற நல்வாழ்க்கையில் நிறைவுடன் வாழச்செய்கிறது. 376. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச் சொரியினும் போகா தம பொருள் விளக்கம்: பரியினும் - தீவினையால் ஏற்படுகின்ற விளைவுகளின் பால்அல்ல - அமுதமான பயன்களை ஆகாவாம் - ஆன்மாவானது ஏற்றுக் கொள்வதில்லை உய்த்து - எப்படியேனும் காரியத்தை முடிக்க சொரியினும் மிகுதியாக முயன்றாலும் கா - காவல் காத்து விழிப்பாயிருந்தாலும் போ - தீமைதரும் பயன்கள் அழிவதில்லை தம துன்பங்களை நிரப்பிக் கொண்டே இருக்கும்