பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 高島 புதிய உரை: சக்தி வாய்ந்த பயன்தவறாத வாக்குடையவரின் வல்லமை, பூவுலக மக்களுக்கு ஞானம் நிறைந்த சொற்களாகி, உயர்வழியில் அவர்களைச் செலுத்தும். விளக்கம்: உரம் வாய்ந்த உடல். அறம் தோய்ந்த மனம் தரம் சார்ந்த வாழ்வு. திறம் தேர்ந்த செயல்முறைகள் கொண்ட மேலோரான மாந்தராகிய நீற்றார் இந்த வையத்து மக்களுக்கு வாழும் மறையான வல்லமை மிக்க தேகத்தை வளர்த்துக் கொள்ளவும், உறுதி வாய்ந்த உள்ளத்தை நிறைத்துக் கொள்ளவும் உயர்நிலை வாழ்வு வாழ்ந்து மேம்படவும் கூடிய ஞான வழியில் வழிப்படுத்தி விடுவர். விடும் என்பது சேர்க்கும் என்பது போலவே, நல்லதைக் காட்டி, நலமல்லாதன வற்றை நீக்கிவிடும் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். * இந்தக் குறளில் உடல் வலிமையும் மனவலிமையும் பெற்றவரது சொல் வலிமையின் மேன்மையைச் சொல்லிக் காட்டுகிறார். 29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது பொருள் விளக்கம்: குணம் என்னும் = ஒழுக்கப் பண்புகளையே கொள்கையாகக் கொண்டு - குன்றேறி நின்றார் = குறைகளைக் கடந்துஉயர்ந்தவர் (மலையளவு - உயர்ந்தார் என்பது ஒரு உரை) வெகுளி = மனம் மாறுபட்டு வருகின்ற கோபத்தை கணமேயும் = தன்னிடம் சிறுநொடி கூட காத்தல் அரிது - வைத்திருக்க மாட்டார் சொல் விளக்கம்: குணம் - கொள்கை, ஒழுக்கத்தன்மை குன்று = மலை என்றும் சொல்லலாம். குறை என்றும் கூறலாம் ஏறி நின்றார் = கடந்து நின்றார் முற்கால உரை: துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி, தானுள்ளளவு கணம் ஆயினும், வெகுளப் பட்டாரால் தடுத்தல் அரிது.