பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/581

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Ꮌ80 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வகை = தந்திரங்கள் எல்லாம் அல் ஆல் - மதிமயக்கத்தையும், கடும் நஞ்சையும் போன்றதாகும் கோடி அதைப் புதுமையென்று தொகுத்தார்க்கு குவித்துத் திரட்டியவர்களுக்கு துய்த்தல் அந்த வினைப் பயனை அனுபவித்தல் அரிது - முடியாதது ஆகிவிடும் சொல் விளக்கம்: வகுத்தான் - தீவினையை வகுத்தவன்; வகை = தந்திரம், முறை அல் இருள்; ஆல் நஞ்சு, கோடி - புதுமை தொகுத்தல் - திரட்டுதல் துய்த்தல் = வினைப் பயனை அனுபவித்தல், ஐம்பொறி நுகர்ச்சி முற்கால உரை: ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருள்கள் கோடியே உயர்ந்து தொகுத்தார்க்கும், தெய்வம் வகுத்த வகையால் அல்லது நுகர்தல் உண்டாகாது. தற்கால உரை: 'இதற்கு இது என முறைப்படி அன்றிக் கோடிக் கணக்கில் வைத்திருப்பாரேனும் நுகர முடியாது. புதிய உரை: தீவினையாளன் தந்திரத்தால் உண்டாக்கிய எல்லாமே நஞ்சைப் போன்றது. மதிமயக்கம் அளிக்கவல்லது. தீவினையால் தான் உண்டாக்கிய புதுமைகளை எப்படித்தான் திரட்டிக்காத்தாலும். அவனால் அதை அனுபவித்து மகிழ முடியாது. விளக்கம்: தீவினையால் பிறப்பது தீமைகள்தான். தீமைகள் கொடுப்பது துன்பங்கள்தான். துன்பங்கள் எல்லாம் வாழ்வின் இழப்புக்களுக்கு, lெ ழி நெடுகக் குழப்பங்களுக்கு, விரித்துக் கொண்டே போகின்றன. தீவினையாளன் எத்தனைதான் தந்திரங்களில் தேர்ந்திருந்தாலும், எவ்வளவு தான் புதுமையாக விளைச்சல்களை அறுவடை செய்திருந்தாலும், அவனால் அவற்றைத் திரட்டித்தான் பார்க்க முடியும், ஐம் புலன்களால் அவற்றை அனுபவிக்க முடியாது. அநியாயமாக வந்தவையெல்லாம் அநியாயமாகவே தோன்றி. ஆக்கியவனை அழித்துவிட்டுத்தான் மறையும் என்பார்கள். இந்த உண்மையை வள்ளுவர் இந்தக் குறளில் எடுத்துரைக்கிறார்.