பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/584

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை ،ملایر சிந்ததிக்கோ ஒன்றன்மேல் ஒன்றாகத் துன்பங்கள் வந்து தொலைப் பதை அவர் கண்டு கெ ாலுடு துன்பங்களை அனுபவிப்பார். விளக்கம்: -" #. m - o Ո * -: - o ** - o இருவினைகள் என்று ஊழ்வினையைப் பிரித்த வள்ளுவர், நல் வினையின் நயங்களையும், தீவினையின் பயங்களையும் தெளிவாகத் தெளித்துக் கொண்டேவந்தார். வினையாற்றியவருடைய வரலாற்றையும் வாழ்வு முறையை மட்டும் சொல்லிவிட்டு விடாமல், அவரைத் தொடர்ந்து வருகிற சந்ததியாரைப் பற்றியும், துண்டிலில் சிக்கிய மீன்போல ஒரு தோற்றத்தை உண்டுபண்ணிக் காட்டுகிறார். அதில் தவறு பண்ணாத சந்ததிகள் தீவினையால் தத்தளிப்பதையும், நல்வினையால் நல்வாழ்வு பெறுவதையும் சொல்லுகிறபோது நல்வினையாளன் மகிழ்கிறான். தீவினையாளன் தானும் துன்பப் பட்டு, தன்பரம்பரையும் தன்னால் அழிவதையும் காண்கிறான் என்பதை விளக்கிச் சொல்லுகிறபோது அறிவுடையான் எவனும் தீவினைப்பக்கம் செல்லவே மாட்டான். 380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் பொருள் விளக்கம்: ஊழில் = தொடர்ந்து செய்து வருகிற பழவினைகளைப்போல பெருவலி = பெரும்வலிய சக்தி யாவுள எதுமெய்யாக இருக்கும் மற்றொன்று = அந்த நல் தீவினைகளை மாற்ற வேறு ஒன்று வந்து சூழினும் மாற்ற முயன்றாலும் தான் - ஆன்மாவானது முந்து உறும் = முந்திக்கொண்டு வந்து முடிவுகளைச் செய்யும் சொல் விளக்கம்: ஊழ் - பழவினை; யா - எது; ஊ - மெய்: தான் = ஆத்மா முற்கால உரை: தன்னை விளக்கும் பொருட்டு தனக்கு மறுதலை ஆவதோர் உபாயத்தைச் சூ ழினு ம், தான் அவ்வு பாய மேயானும் பிறிதொன்றாலும் வலியாக அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும். அதனால் ஊழ்போல் மிக்க வலியுடையன யாவை உள.