58. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
தற்கால உரை:
முற மையையும், சூழலையும் விட வலியது எது? மாற்றத்திட்டமிடினும் அவையே முன் நிற்கும். புதிய உரை:
தொடர்ந்து செய்துவருகிற பழ வினைகளைப் போல பெரும் சக்தி, எதுமெய்யாக இருக்கும்? அந்த நல் தீவினைகளை மாற்ற வேறு ஒன்று வந்து மாற்ற முயன்றாலும் ஆன்மாவானது முந்திக் கொண்டு வந்து, முடிவுகளைச் செய்யும். விளக்கம்:
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும், உயிர்க் காற்றால் வாழ்கிறான். உயர் பேச்சால் மகிழ்கிறான். அவனவன் செய்யும் செயல்களால் இனம் பிரிக்கப்படுகிறான்.
வாழ்க்கையில் மனம்போல வாழ்வது ஒருமுறை. மானம்போக வாழ்வது இன்னொருமுறை. எப்படியேனும் வாழ்கிறமுறை, தப்படிப்போடுகின்ற தடித்தனமுடையவனின் தலையாய பண்பாக அமைகிறது. நாலுபேர் மகிம நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது செய்பவரின் அன்பும், பண்பும், ஆத்மார்த்தமாக அமைந்து விடுகிறது.
செயல் ஆற்றுபவன் pவிப்பவன். செயலாற்றோன் சவத்திற்குச் சமானம். ஒவ்வொரு செயலும் முன்வினையாக அமைந்து, பிறகு பின்வினையாகி, பிறகு பழவினையாகிறது. அதுதான் ஊழ். ஊழ் என்பது ஒருவனின் செயலாகப் பரிணமித்து உடலும், உயிருமாக இரண்டரக் கலந்திருக்கிறது.
அத்தகைய உயிர்ப்பு மிகுந்த செயல்களை ஆத்மாதான் கணிக்கிறது. கட்டுபடுத்துகிறது. நேர்நெறியை நிலைப்படுத்த முயல்கிறது. அதனால்தான் ஊழைவிடச்சக்தி மிகுந்தது உலகத்திலே இல்லை. அதன் உயிர்ப்பாற்றலை ஆன்மாதான் அரசாள்கிறது. அந்த ஊழேவிட மாபெரும் சக்தியாகத் திகழ்கிறது என்று கூறி வள்ளுவர் அறத்துப்பாலை முடித்து வைக்கிறார்.
அறத்துப்பால் முற்றுப் பெற்றது. பொருட்பால் புதிய உரையில் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
டாக்டர். எஸ். நவால் செல்லையா
பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/585
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
