பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 59 31. சிறப்புஈனும் செல்வமும்ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு பொருள் விளக்கம்: அறத்தின் இல்லற வாழ்வில் வேண்டியனவற்றில் அதிகம் பற்றில்லாது ஊங்கு = உரிய அறவழியில் மிகுதியான மேம்பாடுடைய தன்மையில்; ஆக்கம் = வாழ்க்கையை வாழ்கிறவனாகிய அறன் எவனோ - எவனாக இருந்தாலும். உயிர்க்கு - அவன் உயிர்க்கும் (உடலுக்கும்) சிறப்பு ஈனும் = மேன்மையை மிகுதியாக வழங்கி செல்வமும் ஈனும் - உடலுக்குச் செழிப்பையும் அழகையும், நுகர்ச்சியில் வாழ்க்கை இன்பத்தையும் கொடுக்கும் சொல் விளக்கம்: செல்வம் - செழிப்பு, அழகு, நுகர்ச்சி வாழ்க்கை, இன்பம் சிறப்பு = உயர்ச்சி, தலைமை, மதிப்பு, மிகுதி (இன்பத்தின் மேன்மை மிகுதி); ஊங்கு = உயர்ச்சி, மிகுதி, மேம்பாடு ஆக்கம் = பெருக்கம், எழுச்சி, செல்வம். முற்கால உரை: வீடுபேற்றையும் தரும்; துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; ஆதலால், உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? தற்கால உரை: சிறந்த புகழைத் தருவதும், நிறைந்த பொருளைத் தருவதும் அறமேயாகும். ஆதலால் இந்த அறத்தைக் காட்டிலும் உயிர்க்கு நலம் செய்வது வேறொன்றுமில்லை. புதிய உரை: இல்வாழ்வில் அதிகம் பற்றில்லாது அறவழியில் மிகுதியான மேம்பாடுடையவர், உயிர்க்கும் உடலுக்கும் மேன்மையும் அழகும் பெற்று இன்ப வாழ்வில் இணைந்து வாழ்வர். விளக்கம்: வாழ்வின் தேவைகளுக்காகப் பற்றுமிகாமல் பற்றில்லாப் பாங்கான அறவழியில் மேம்பாடு கொண்டு வாழ்கிறவன் எவனாக இருந்தாலும், அவனது உயிர்க்கு மேன்மை மிகுதியாகக் கிடைக்கும். (அதாவது வாழ்நாள் பெருகும்) உடலுக்கு செழிப்பும் அழகும் ஐம்புல நுகர்ச்சியில் நுண்மையும் இன்பமும் கிடைக்கும்.