பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா நல்ல வாழ்வானது நல்ல உடலையும் நல்ல நோயற்ற வாழ்வையும் தந்து, நோயற்ற செல்வத்தையும், நிறைவுற்ற செழிப்பான வாழ்க்கையையும் வழங்குகிறது. அதுவே அறன் பெருகிற சிறப்பாக அமைந்து விடுகிறது. செல்வம் (பணம்) வந்து விடுவதால் மட்டும் ஒருவர் வாழ்வில் செழிப்பு வந்து சேர்ந்து விடுவதில்லை. நோயற்ற உடலும் வாழ்வும்தான் நிறைவான செல்வமாகும். 32. அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு பொருள் விளக்கம்: மறத்தின் ஊங்கு = அறம் நீங்கிய தீயவற்றின் மிகுதியால் ஆக்கம் இல்லை = வருகிற (செல்வத்தால், எழுச்சியால்) சிறப்பு எதுவும் இல்லை. அதனை = அதிகரிக்கின்ற அறத்தின் ஊங்கு = அறச் செயல்களின் மிகுதியால் கேடு இல்லை - கெடுதல் எதுவும் நேர்வதுமில்லை சொல் விளக்கம்: அதனை = அதிகமாக; ஊங்கு = உயர்ச்சி, மிகுதி, மேம்பாடு, மிகவும்; கேடு - அழிவு, வறுமை, மரணம், சிதைவு, இழிவு முற்கால உரை: ஒருவனுக்கு அறம் செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மயக்கத்தான் மறத்தலின் மேம்பட்ட கேடும் 軒 * - இல்லை. தற்கால உரை: அறம் செய்தலினும் ஒருவனுக்கு நன்மையாவது எதுவும் இல்லை. அதுபோல், அவ்வறத்தை மறத்தலினும் கேடாவது எதுவும். இல்லை. i புதிய உரை: அறம் நீங்கிய தீய செயலால், சிறப்பில்லை; அதிகரிக்கின்ற அறச்செயல்களால் நன்மை அதிகமாவதால் கெடுதி எதுவும் இல்லை.