பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: பொருந்தும் வகையால் அறச் செயல்களை இடைவிடாமல் முடியும் இடங்களிலெல்லாம் செய்தல் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். புதிய உரை: உடல் உள்ளம் பொருந்தும், வழிவகையால் அறம் செய்க. உள்ளம் அலைக்கழியும் வழிகளில் செல்லாதே. விளக்கம்: உள்ளத்தால் ஒத்து, உடலால் ஒட்டி, உள்ளத்தால் ஒன்றிப் போய் நல்வினைகளைச் செயக. ஐம்புல ஆதிக்கத்தால் அலைகிற உள்ளம் செல்லுகிற வழியில் செயல்பட இசைந்து விடாதே. அதனால் உடல் நலக்கேட்டையும் வாழ்வின் மகிழ்யையும் இழந்து வருந்தாதே என்று அறனுக்கு அறிவுரை பகர்கிறார் வள்ளுவர். பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது இயற்கை. கள்ளத்தை நோக்கி உள்ளம் சாய்வது மனித இயற்கை. ஆகவேதான், உள்ளம் வழி போவதற்கு முன், காரண காரிய வகைகளை ஆராய்ந்து நல வாழ்வுக்குப் பொருந்துகிற நல் வினையையாற்று என்று வலியுறுத்துவது வள்ளுவர் மாண்பு. o செய்த காரியம் சிறிது நேரம் இருந்து, பலனைத் தந்து போவதற்குச் செயல் என்று பெயர். செய்த காரியம் அன்றிலிருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு பயனைத் தந்து கொண்டே தொடரும். அதற்கு வினை என்று பெயர். அதனால்தான் வினையானது நல்வினை தீவினை என்று பிரிந்தது. தீமையே தொடர்ந்தால் அதை ஊழ்வினை என்றும் பாழ்வினை என்றும் நொந்து கொள்ளவும் வைத்து விடுகிறது. நல்ல முடிவையே நல்கி வருவது நல்வினையாகிறது. 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற பொருள் விளக்கம்: மனத்து உள்ளத்தாலும்; கண் - உடம்பாலும் மாசிலன் ஆதல் = கறைபடாமல் ( குற்றம் இழைக்காமல்) வாழ வேண்டும் அனைத்தறன் - (அப்படி வாழாதவர்க்கு) அவர் ஆற்றும் அறச் செயல்கள் கூட