பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை Ꮾ3 ஆகுல மாறுபாடுற்று துன்பம் விளைவிக்கின்ற பிற நீர பின்னாள் முழுவதும் வருந்தும் குணமுடையவனவாக மாற்றிவிடும். சொல் விளக்கம்: ஆகுலம் = துன்பம், மாறுபாடு - ஆரவாரம்: நீர = குணத்தை உடையன; பிற = பின்பு. முற்கால உரை: அவ்வாற்றின் அறஞ் செய்வான் தன் மனத்தின் கண் குற்ற முடையவன் அல்லனாக! அவ்வளவே அறமாவது அஃதொழிந்த சொல்லும், வேடமும் அறமெனப்படா ஆரவார நீர்மைய! தற்கால உரை: மனத்தில் குற்றம் இல்லாதவன் ஆகுதலே எல்லா அறங்களுக்கும் மூலமாகும். மற்றவை ஆரவாரப் பகட்டுகளேயாம். o புதிய உரை: உள்ளத்தாலும் உடலாலும் குறைபாடின்றி வாழ்க. இன்றேல், அவர் ஆற்றும் அறச்செயல்கூடத் துன்பம் விளைவிக்கும் குணமிலியாக அவனை மாற்றிவிடும். விளக்கம்: உள்ளிம்தான், உலகியலில் அவாவி, உணர்ச்சி வசப்பட்டு உடலை ஆட்டுவிக்கிறது. ஆகவே, உடல் மாசும் மன மாசும் சேர்ந்து விடாமல் 'அறன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாக (கறை) பட்டு விட்டால் செய்கிற அறச்செயல்கள் கூட, பின்னாளில் பெருந்துன்பம் விளைத்து விடும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். ஆகுல என்பது ஆரவாரம் என்னும் பொருளுடன், மாறுபாடு துன்பம் என்று சிறந்த பொருளையும் கொண்டிருக்கிறது நீர என்றால் குணமுடையது; பிற என்றால் மற்றவை என்றும் பிறகு என்றும் பொருள் உண்டு. இந்தக் குறளில், மனம் பொருந்துகிற வினைகள் செய்தாலும் அந்த மனத்திலே மாசுபடாமல் பார்த்துக் கொள்வது அறனின் தலையாய கடமை என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். நல்ல உடல் நல்ல மனம் நல்ல வாழ்வு என்னும் நலமான கொள்கையைத்தான் வள்ளுவர் இந்தக் குறளில் வலியுறுத்துகிறார்.